சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Saturday, May 20, 2006

தூணிலும் இருப்பாரா?

“தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று பிரகலாதன் சரித் திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவு ளென்பதில் அர்த்தமில்லை.
ஆதலின், கண்டவரை யில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமு மில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம். அங்கு மிங்கும் ஓடுங்கிரணங்களும் (சுயனயைவiடிn), தூசும் (னுரளவ), பரமாணுக்களும் (நுடநஉவசடிளே யனே ஞசடிவடிளே) இருப்பதாக யூகையே யொழிய நிலைத் திருக்கும் சத்தாகிலும், அறியும் சித்தாகிலும், உணர் வாகிய ஆனந்தமும், மனிதனுடைய எண்ணத்தின் அதாவது வார்த்தை, அல்லது சொற்கள் அன்னி யில் வேறு தனித்து இருப்பதாக யூகிக்க இடமே இல்லை. உலகில் பரவியுள்ள பற்பல தத்துவ ஞானங்களெனக் கூறும் (ஞாடைடிளடியீhநைள) வார்த்தைகள் யாவும் கற்பனைகளாக முடிகின்றபடியால், எதை யும் அனுபவமாகப் பார்க்க முடியவில்லை.

அந்தந்த தத்துவப் பொருள்களெனப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டே இருக் கின்றன. கடவுளைப்பற்றிப் பேசும் ஞானிகளும், பக்தர்களும் யானையைக் கண்ட குருடர்களைப் போல் பேசுகின்றார்கள். யானையைக் கண்ட குருடர்களாகிலும் ஏதோ ஒரு மிருகத்தைக் கண்டு தங்கள் அனுபவத்திற்குத் தக்கவாறு சொல்லுகின் றார்கள்.
ஆனால், ஞான கிளோவெனில், யாதொன் றையும் பார்க்காமலேயே வாய்க்கு வந்தவாறு சொற்களைக் கட்டி விடுகிறார்கள். கடவுள், ஆன்மா, பிரம்மன், சிவன், விஷ்ணு முதலிய முப் பத்து முக்கோடி தெய்வங்களும், நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், அஷ்டபாலர் முதலிய உபதெய்வங்களும், இருள வன், வீரன், சூரியன், காட்டேரி, பெத்தண்ணன், மாரி, முனியன், சங்கிலி, பாவாடை, குழி இரிசி முதலிய பேய், பிசாசுகளும், நாம் தொட்டிலில் பழகிய சில வார்த்தைகளைக் கொண்டு வயது வந்த பிறகு கட்டிய கற்பனை வார்த்தைகளேயாகும்.
இந்தச் சொற்களுக்காகத்தான் உலகத்தில் எங்கும் கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும், கெதிட் ரல்களும் கட்டப்பட்டி ருக்கின்றன என அறிக! இருளன், வீரன், சூரியனுக் குப் பிரபஞ்சத்தில் இடமில்லை எனில், பக்தர் வணங்கி வழிபடும்

- ம. சிங்காரவேலர்,
(கடவுளும், பிரபஞ்சமும் என்ற நூலில்)

0 Comments:

Post a Comment

<< Home