சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Thursday, June 01, 2006

மாமேதை சிங்காரவேலர்

மாமேதை சிங்கார வேலர் உலக அளவில் புகழ்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் மகாத்மா காந்தி, ஈ.வே.ரா மற்றும் மா. சிங்காரவேலர்இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார்.
1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார்.கந்தப்ப செட்டி வம்சத்தில் உயர்கல்வி பெற்றவர்களில் இவர் ஒருவரே. 1881 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பு தேர்வு பெற்றவர், கிறிஸ்தவர் கல்லூரியிலிருந்து 1884 ஆம் ஆண்டு தி.கி. படிப்பு முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பிரசிடென்ஸி கல்லூரியில் ஙி.கி. முடித்தார்.
1907ல் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் ஙி.லி. டிகிரி பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத் தொழில் புரிந்தார். 1889 ஆம் ஆண்டு அங்கம்மாள் (சாதி மறுப்பு திருமணம்) என்பவரை மணந்தார். அவருடைய ஒரே பெண் குழந்தை கமலா.வழக்கறிஞராக அமோகமாக வாழ்க்கையில் வெற்றி கண்ட சிங்காரவேலர், திருவான்மியூர், மைலாப்பூர் ஆகிய இடங்களில் சில எஸ்டேட்டுகளை வாங்கினார்.
பெண்களுக்கு சம பங்கில்லாத அந்த காலத்தில் தனது மகளின் மகன் சத்தியகுமாரை தனது மகனாக 1932ல் சுவீகாரம் எடுத்துக்கொண்டார்.விடுதலைப் போராளிமகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட சிங்காரவேலர் தமிழகத்தில் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரானார். 1918ல் பிரிட்டிஷ் அரசு ரௌலட் சட்டம் எனும் மக்கள் விரோத சட்டத்தை _ மக்களின் பேச்சு சுதந்திரத்தைப் போராட்ட சுதந்திரத்தை மறுக்கும் ரௌலட் சட்டத்தை கொண்டுவந்தது. விசாரணையின்றி மக்களை தண்டிக்க அது பாதை அமைத்தது. அந்த கறுப்பு சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சி போராட்ட வடிவங்களை கையிலெடுத்தது.
சிங்காரவேலர் சென்னையில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தினார்.இந்திய வரலாற்றில் 1919 ஏப்ரல் 13. இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்த்தெடுக்கப்பட்ட நாள். 400க்கும் அதிகமானவர்கள் இறந்த 2000 பேர்கள் தங்களின் கால்களை இழந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நாளே அந்நாள். ரத்த ஆறு ஓடியது. நாடு முழுவதும் பஞ்சாப் படுகொலை கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இத்தகைய மனிதத்தன்மையற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார்.
1921 மே மாதம் ஒரு பொதுக் கூட்டத்தில் சிங்காரவேலர் தனது வக்கீல் கவுனை எரித்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்கும் முகமாக தனது வக்கீல் தொழிலை விட்டார். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த அத்தனை துறைகளையும் பகீஷ்காரம் செய்ய தீர்மானித்தார். 1921 ல் அவர் மகாத்மா காந்திக்கு அவருடைய செயலுக்கு விளக்கமாக எழுதுகையில் “நான் இன்று எனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டேன். இந்த நாட்டின் மக்களுக்காக தங்களுடைய போராட்டத்தை நான் தொடர்கிறேன்’’ ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக சிங்காரவேலர் திகழ்ந்தார்.
முதல் படியாக அவர் அறிவித்த முழு அடைப்பும் வெற்றி பெற்றது.ரௌலட் சட்டம் நிறைவேறிய பிறகு, ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் சௌரி சேளரா நிகழ்வுகளுக்கு பிறகு பிரிடிஷ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கினர். மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவிக்க மக்களின் எதிர்ப்புணர்வை மாற்ற வேல்ஸ் இளவரசர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இந்த முயற்சி மக்களை சாந்தப்படுத்த வில்லை. சென்னையில் இந்த தூதுக்குழு வருகையை பகீஷ்காரம் செய்ய மக்களை திரட்டினார். சென்னையை குலுக்கிய ஒரு மிகப்பெரிய ஆர்பாட்டம் என இதனை அணணாதுரை வர்ணிக்கிறார்-.
1922ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மகாசபையில் சிங்காரவேலர் பங்கேற்றார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, ‘தோழர்களே’ என்று அழைத்தார். (இந்தியாவில் முதலில் தோழர் என்ற வார்த்தையை பயன்படுத்திய தலைவர் அவர்) கயாவில் அவருடைய பேச்சின் சுருக்கம் வருமாறு: “மனித நேய ஆட்சிக்காக நாம் போராடி வருகிறோம் ஒத்துழையாமை, வன்முறையின்மை ஆகிய ஆயுதங்களோடு நாம் போராடுகிறோம். அவைகளில் நானும் நம்பிக்கை வைக்கிறேன்.
ஆனால் கம்யூனிஸ்ட் சகோதரத்துவத்திற்கு அவர்கள் (ஆட்சியாளர்கள்) பொருந்தாதவர்கள். அவர்களின் நடத்தையிலே வேறுபடுபவர்கள்.’’சாதனைகள்:
1. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்ற இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்.
2. 1923ல் தொழிலாளர் தினம் (மே தினம்) கொண்டாடியதன் மூலம், மேதினம் கொண்டாடிய முதல் இந்தியர் (ஆசியாவிலேயே முதலாவதும் கூட)
.
3. 1923 மே மாதத்தில் தொழிலாளர் விவசாய கட்சியை தொடங்கினார்.
4. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியதிலும் அவரே முன்னோடி.
1925ல் சென்னை மாமன்றத்தின் (சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ) உறுப்பினராக தேர்வு பெற்றபின் இந்த திட்டத்தை துவக்கினார்.
5. தொழிலாளர் நலனுக்காக, “தொழிலாளர்’’, “லேபர் கிசான்’’ ஆகிய 2 பத்திரிகைகளை தொடங்கினார்.
இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்:
இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். பொருளாதார சீர்திருத்தத்தை மனதில் கொண்டு, “சென்னை தொழிலாளர் சங்கம்’’ என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவிலேயே முதலில் ஏற்படுத்தினார். இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இதுவே.வி.ஷி.வி ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களை உருவாக்கியவரும் இவரே.இந்திய தேசிய காங்கிரஸ் கயாவில் கூடியபோது, உலகத்தின் நலத்தில் ஈடுபாடு கொண்ட வெகுஜன அமைப்பின் பிரதிநிதியாகவே அவர் பங்கேற்றார்.
தொழிலாளர் சட்டங்கள் தேவை என்பதற்காக பேசிய அவர், காங்கிரஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே தொழிலாளர் இயக்கமும் உள்ளது என கருதினார். நாடு சுதந்திரத்திற்கான இலக்குகளை அடைய நாட்டு தொழிலாளர்களின் பயன்பாட்டை பயன்படுத்த தவறியதாக அவர் எடுத்துக்காட்டினார். காங்கிரஸ், வன்முறையற்ற தன்மை, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழிலாளர்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று யோசனை கூறினார்.தேசிய அளவில் ஒரு வேலைநிறுத்தத்தை தொடுக்க முடியவில்லையானால் ஆங்கிலேய அரசை அசைக்க சாத்தியமில்லை.
எனவே, தொழிலாளர்களை அணுகி காங்கிரசின் ஒரு அங்கமாக தொழிற்சங்கங்களை தொடங்குதல் இன்றியமையாதது என்றும் கூறினார்.தொழிலாளர்களில் இலக்கு சுதந்திரம்; அது அரசியல், வணிக, பொருளாதார சுதந்திரம் என அர்த்தப்படும் என்றார்.இந்தியாவின் மேதினத்தை கொண்டாடியவர்களில் முன்னோடிஇந்தியா முழுமையும் இந்தியாவில் (ஆசியாவில் கூட) மே தினத்தை முதல் முதலில் கொண்டாடிய முதல் மனிதராம் சிங்காரவேலரையே அவரின் உதாரணத்தை பின்பற்றினர்.ஆரம்பக்காலத்தில் 1888 மே மாதம் முதல் தேதியன்று மே தினம் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய வெகுஜன ஊர்வலத்துடன் நடைபெற்றது.
அதில் பேசிய அனைவரும் 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டாம் என வலியுறுத்தினர். அதன் பிறகு முதலாளித்துவ வாதிகளால் உழைப்பாளிகள் கொல்லப்பட்டதை முன்னிட்டு அத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுதான் மேதினத்தின் சிறப்பும் வரலாறும் ஆகும்.1923ல் மேதினத்தை 2 இடங்களில் கொண்டாட ஏற்பாடுகளை செய்தார் சிங்காரவேலர். ஒரு பொதுகூட்டம் அவருடைய தலைமையில் உயர்நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் நடைபெற்றது. மற்றொன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. “தொழிலாளர்களால் மட்டுமே மேதினம் கொண்டாடப்படுகிறது எனக்கூறிய இவர், தொழிலாளர்கள் இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்றி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பர் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக தொழிலாளர்களுக்கான ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுவதாக அரிவித்தார். சிவப்புக்கொடியை ஏற்றி ‘தொழிலாளர் விவசாயிகள் கட்சி’யை தொடங்கினார். இந்த புதிய கட்சியின் திட்டங்களையும், தீர்மானங்களையும் விளக்கினார்.1927ல் மேதினம் சிங்காரவேலர் இல்லத்திலேயே கொண்டாடப்பட்டது. அவர் உழைப்பாளர்களுக்கு உணவளித்தார். ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார்.
தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறித்து தேசத்தின் சகலத் தொழிலாளர்கள் சார்பாக அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேதின கொண்டாட்டத்தை பற்றி ஹிந்து பத்திரிகை எழுதியது. “சென்னை மேதின விழாவில் தொழிலாளர் விவசாயி கட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் சிங்காரவேலர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேதினத்தை விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி அரசை வலியுறுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. கட்சியின் தலைவர் வன்முறையற்ற பாதையே கட்சியின் நடைமுறை என விளக்கினார். நிதி உதவி கேட்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுதந்திரத்தை அடைய உலகத்தொழிலாளர்கள் ஒன்று கூடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.’’அண்ணாதுரை தனது மேதின கூட்டத்தில் மேதினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். 1986 முதல் மே தினத்தை அரசும் கோண்டாடுகிறது. நேப்பியர் பூங்கா என்பதை மேதின பூங்கா என முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றினார். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக முன்னாள் பிரதமர் க்ஷி.றி. சிங் மேதினத்தை ஒரு சம்பள விடுமுறைநாளாக அறிவித்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளின் இத்தகைய செயல்களுக்கு சிங்காரவேலரே ஒரு காரணியாக அமைந்தார்.1933ல் நடைபெற்ற மேதினத்தில் சிங்காரவேலர் ஆற்றிய விரிவான உரை 1933 மே 7ஆம் தேதி ‘கொடியறம்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று.அவருடைய பேச்சின் சாராம்சம் வருமாறுநாம் வன்முறையிலோ அழிவிலோ சமத்துவத்தை நம்பவில்லை.
நாம் பொருட்களின் பங்கீட்டில் சமத்துவம் நிலவுகிறதா என்பதையே நாம் காணவேண்டும். உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். யாரெல்லாம் நாம் சமத்துவத்தை நம்புகிறோமோ அவர்கள் அனைவரும் பார்லிமெண்ட் அவைகளில் நாம் இடம் பிடிக்க வேண்டும். உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டு செல்லும்.
மதிய உணவு திட்டத்தின் முன்னோடி1925ல் சிங்காரவேலர் சென்னை மாமன்ற (சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ) உறுப்பினராக தேர்தலில் நின்று ஜெயித்தார். அவரது முதல் தேர்வு சுற்றுப்புற தூய்மையே. தூய்மையே சிங்காரவேலரின் மிகப்பெரிய பங்களிப்பு குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியதே ஆகும். பின் காமராஜ்க்கு உதவி; இந்த திட்டம் தமிழக அளவில் அமல்படுத்தப் பட்டது. சிங்காரவேலர் தமிழ்நாடு அரசின் நிர்வாக மொழி தமிழே நிலைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிங்காரவேலரும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளர் இயக்க வரலாற்றில் 1918 ஏப்ரல் 27ஆம் நாள் முதல் தொழிற்சங்கம் உருவானது. வ.உ. சிதம்பரம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டமைக்காக அவருக்கு விதிக்கப்பட்ட பல ஆண்டுகால ஆயுள் தண்டனையின் மூலம் இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கான தொழிலாளர் சங்கம் தேவையென்பதை உணர்ந்தனர். அதன் விளைவாக சென்னை தொழிலாளர் சங்கம் உருவானது. இந்த சங்கத்தின் தலைவர் சிங்காரவேலர்.இந்த சங்கம் உருவானவுடன் சிங்காரவேலர் சக்கரை செட்டியார், சர்க்காரி ஆகியோருடன் இணைந்து சில வேலைநிறுத்தங்களை நடத்தினார். ஙி&சி யில் உருவான சங்கம் ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வேறு பல சங்கங்கள் உருவாகின.
அவை 1. வி.ஷி.வி ஊழியர்கள் சங்கம் 2. எலக்டிரிசிட்டி தொழிலாளர் சங்கம் 3. டிரெயின்வே பணியாளர் சங்கம் 4. பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் 5. தச்சுத் தொழிலாளர் சங்கம் 6. அலுமினியம் தொழிலாளர் சங்கம் 7. ஐரோப்பிய தொழிலாளர் சங்கம் 8. மருத்துவர்கள் (பார்பர்கள்) சங்கம் 9. துப்புரவு தொழிலாளர் சங்கம் 10. மீனவர் சங்கம் 11. ரயில்வே தொழிலாளர் சங்கம் 12. கோயம்புத்தூர் நூற்பணியாளர்கள் சங்கம்அனைத்து சங்கங்களும் சிங்காரவேலரால் ஆரம்பிக்கப்பட்டவை.
தென்னிந்தியாவில் தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கிய உடனே அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் காட்டுத்தீயாய் பரவியது. அதன் விளைவாக மும்பை, கொல்கத்தா, கான்பூர், நாக்பூர் போன்ற பகுதிகளிலும் தொழிலாளர் சங்கங்கள் உருவாகின. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் பெருகியதால் சங்கங்கள் பெருகின.சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கிய சில வாரங்களிலேயே எல்லா முனைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பின.
தொழிற்சாலைகளின் முதலாளிகள், தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர்.சென்னையிலிருந்த சூளை காட்டன் மில் தொழிலாளர் இயக்கத்தை பலப்படுத்தினார். முதலாளிகளின் வெறுப்புணர்வு தொழிலாளிகளின் மேல் அதிகரித்ததாலும், திரு.வி.க. மற்றும் சிங்காரவேலரின் எழுச்சியூட்டும் இயக்கத்தால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைய அதிக ஆர்வம் கொண்டனர். சென்னை தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், பிரிண்டிங் பணியாளர் சங்கம், பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதில் புகழ்பெற்று விளங்கின.
1921 ஆகஸ்டில் ஙி&சியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நிர்வாகம் சாதி சண்டையாக மாற்ற சதி செய்து அதன் விளைவாக 2 பகுதி மக்களிடத்தில் பிரச்சனை உண்டாகி துப்பாக்கிச் சூடும் நடைப்பெற்றது. துப்பாக்கி சூட்டில் பெரம்பூரில் ஏழுபேர் இறந்தனர். அவர்களின் இறுதி சடங்கிற்கு போலீஸ் தடைவிதித்து மீறுவோரை சுடுவோம் என மிரட்டிய போதும் சிங்காரவேலர் தனது மார்பை திறந்து சுடுமாறு கூறி முன்னேறினார். 1927ல் நடைபெற்ற வடக்கு ரயில்வே வேலைநிறுத்தத்தில் கல்கத்தா மற்றும் ஹெளரா ஆகிய இடங்களில் நடைபெற்றது.
அதற்கு சட்ட ஆலோசகராகவும் வேலைநிறுத்தத்தை நடத்துபவராகவும் ஆனார் சிங்காரவேலர்.அதன் பிறகு தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலையில் நடத்திய வேலைநிறுத்தத்திற்கும் தலைமையேற்றார். இந்தப் போராட்டம் இரத்தத்தால் எழுதப்பட்டது. கடும் போராட்ட விளைவுகளுக்குப் பிறகு இவ்வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது. சிங்காரவேலர் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்காரவேலர் “சாதாரணமானவருக்கும் சொத்து அடைவதே கம்யூனிஸம். பூமியினுள் நாம் காணும் பொருட்களை கையாளுவதற்கான ஒரு வழி பொருட்கள் சமமாக பங்கிடப்படும் வழிகளில் ஒன்று’’ என கம்யூனிஸத்£தை விளக்குகிறார்.கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு1925 டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாடு நடைபெற்றது. இதுதான் முதல் மாநாடு ஆகும். சிங்கார வேலர் தனது தலைமைவுரையில் “கம்யூனிசத்தின் விதிகள் மனித நேயத்துக்கு எதிரான நோய்களிலிருந்து மனிதநேயத்திற்கு உதவுதலே ஆகும்.’’
எல்லா மக்களுக்கும் இன்றியமையாத எல்லா பொருட்களையும் உழைப்பாளர்கள் உற்பத்தி செய்கின்றனர் என கம்யூனிசம் கூறுகிறது. அவர்களின் கடுமையான உழைப்பின் விளைவாக ஒவ்வொருவரும் நன்றாக வாழ போதுமானதாகிறது. ஆனால் மூல ஆதாரங்கள் முதலாளிகளின் கையிலே இருக்கும்வரை தொழிலாளர்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒரு நியாயமான பங்கை உற்பத்தியான பொருட்களில் கிடைக்கப் பெற்றால், மூலப்பொருட்கள் அவர்களின் கைக்கு சொந்தமாகிவிடும். இதுதான் கம்யூனிசத்தின் அர்த்தம்.
ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கீழ்க்கண்டவற்றை நோக்கமாக கொள்ள வேண்டும்; சுய ஆட்சி இல்லாமல் வாழ்க்கையில்லை; உழைப்பாளர்கள் இல்லாமல் எந்த சுய ஆட்சியும் இல்லை; அரசாங்கத்தால் பல மாற்றங்கள் நடைபெற்ற போதும் நாம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தலைமை ஏற்கவேண்டும் நாம் கூடவே உழைப்பாளர்களின் உரிமைகளுக்கு பாதுகாவலனாக விளங்க வேண்டும் கல்வி அறிவு இல்லாத மக்கள் திரளை ஒற்றுமைப்படுத்துவதும் அவர்களை விடுதலை செய்வதும் கம்யூனிஸ்ட்களின் கடமையாக கொள்ள வேண்டும். தேசத்தின் வளர்ச்சியும் உழைப்பாளர்களின் முன்னேற்றமும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களை சார்ந்தே உள்ளது எனும்பாடத்தை மற்ற கட்சிகளின் தவறுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பாடம் கற்க வேண்டும்.
நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உழைப்பாளிகளுக்கு நேரடியான பிரதிநிதித்துவத்திற்கான ஒரு முடிவுடன் நீங்கள் வர வேண்டும்’’ என பேசினார்.ஆங்கிலேய அரசு கடுங்கோபம் கொண்டு சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களை நசுக்க திட்டம் தீட்டினர். கம்யூனிஸ்டுகளை 1923 மே முதல் கைதும் செய்தனர். 1924 மார்ச் 4ல் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்காரவேலர் பின் அவரை பெயிலில் விடுவித்தது; ஆனால் வழக்கு தொடர்ந்து நடத்த இறுதியாக அவர் மீதுள்ள வழக்குகளை தொடர்வதா அல்லது நீக்குவதா எனும் முடிவை இந்தியாவுக்கான செயலாளர், இலண்டனில் எடுத்தார். இலண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலாளர் கவர்னர் ஜெனரலைவிட உயர்ந்த பதவியிலுள்ளவர்.
எனவே, உலகத் தலைவராக மாறினார் சிங்காரவேலர். 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாமதத்தில் சிங்காரவேலரும் இதர தலைவர்களும் விடுதலையாயினர். அப்பொழுது சிங்காரவேலருக்கு வயது 70. பிற்கால கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.எஸ்.கே., பி. சீனிவாசராவ், பி. ராமமூர்த்தி, கே. முருகேசன் ஆகியோருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு.தமிழகத்தில் மகாகவி பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மகாகவி பாரதியின் உயிர் இவரின் மடியில் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. திரு.வி.க மற்றும் ஈ.வெ.ரா. பெரியாரின் நல்ல தொடர்பை பெற்றிருந்தார்.
ஈ.வெ.ரா பெரியார் ரஷ்யா செல்வதற்கு இவரே காரணம் என்றும் கூறப்படுகிறது. பெரியாரின் குடிஅரசு பத்திரிகையை பெரியார் அவர்கள் ரஷ்யா சென்றபோது இவரே முழுப்பொறுப்பில் கவனித்து வந்தார்.பெரியாரின் ஈரோட்டுப்பாதை என்ற அற்புதமான திட்டத்தை தயாரித்து கொடுத்தவர் சிங்காரவேலர் என்பதையும் ஈரோட்டில் சுயமரியாதை தோழர்கள் கூட்டத்திலும் சிங்காரவேலர் பேசினார்.இறுதியில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை அச்சு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசிய பேச்சே அவரின் இறுதிப்பேச்சு.பக்கவாத நோயினால் பலமாத காலம் படுத்த படுக்கையாயிரந்த சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இறுதியாய் அவரின் விருப்பப்படி 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் விற்கப்பட்டது.மறைக்கப்பட்ட மாமேதையின் நினைவுகள்“பொது உடைமையை குறிப்பிடும் இந்தியாவுக்குள் நாங்கள் நுழையக் கூடாது’’ என்று விடுதலைக்கு முன்பு வெள்ளையர் அரசாங்கம் தடை விதித்திருந்த நாட்களில் சிங்காரவேலர் அத்தடையை மீறி வெளிநாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொது உடைமை நூல்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்தார்.
சிங்காரவேலர் அந்த நூல்களையெல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாமல் அவைகளையெல்லாம் நன்றாக கற்றுணர்ந்து ஒருசிறந்த பொது உடைமைவாதியாகவும் விளங்கினார்.ஒத்துழையாமை இயக்கத்தின்போது சிங்காரவேலர் சென்னை கடற்கரை கூட்டத்தில் தனது வழக்கறிஞர் அங்கிக்கு தீயிட்டு கொளுத்தியதோடு நீதிமன்றத்திற்கும் இனிபோகமாட்டேன் என்றும் அறிவித்தார் அது பற்றி காந்தியடிகளுக்கும் கடிதம் மூலமாக தெரிவித்தார்.முதன் முதலில் இந்தியாவில் தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும்.
திரு.வி.க., சக்கரை செட்டியார் ஆகியோர் தொழிற்சங்கம் அமைப்பதில் சிங்காரவேலரோடு துணை நின்றவர்களாகும்.1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் நாள் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அமைப்பாக உதயமாயிற்று. சத்திய பக்தா அந்த மாநாட்டை கூட்டினார். அந்த மாநாட்டின் தலைமை பொறுப்பு ஏற்று சிங்காரவேலு தலைமை தாங்கினார்.
அப்போது அவருக்கு வயது 58. சிங்காரவேலர் 1918_ல் சென்னையில் முதல் தொழிற்சங்கத்தை நிறுவினார். 1917 ருஷிய புரட்சி நடந்த 6 மாத காலத்தில் அது நடந்தேறியது.அவர் சென்னை மாகாணத்தில் உருவாக்கிய தொழிற்சங்கங்கள்.ஷிவிஷி தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம். மின்சாரத்தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணை தொழிலாளர் சங்கம், அச்சு தொழிலாளர் சங்கம், அலுமினிய தொழிலாளர் சங்கம், ஐரோப்பிய வீட்டு தொழிலாளர் சங்கம், நாவீதர் சங்கம், தோட்டிகள் சங்கம், ரிக்ஷ£ ஓட்டுனர் சங்கம், கோவை நெசவு தொழிலாளர், சங்கம் மதுரை நெசவு தொழிலாளர் சங்கங்கள். தென் இந்தியாவில் எழுந்த தொழிற் கிளர்ச்சி காட்டு தீபோல் நாடு முழுவதும் பரவி பம்பாய் கல்கத்தா, கான்பூர், நாகபுரி முதலிய இடங்களிலும் தொழிற்சங்கங்கள் தோற்றம் பெறலாயின.
தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் தொழிற்சங்கங்கள் நிறுவப்பட்டன. மேற்கண்ட நகரங்களில் தான் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்தது.சிங்காரவேலர் 1928ம் ஆண்டு நடந்த தென்னியந்திய ரயில்வே தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்தினார். இதற்காக பத்து ஆண்டுகள் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டின் பேரில் அன்றைய சென்னை மாகாண உயர்நீதிமன்றம் தண்டனையை 18 மாதங்களாக குறைத்தது.சிங்கார வேலரின் எழுத்துக்கள் தமிழகத்தில் நீராக பாய்ந்து சுயமரியாதை இயக்கத்தை வளப்படுத்தின சிங்காரவேலர் பரப்பிவந்த சமதர்மக் கொள்கையும் தந்தை பெரியார் பரப்பி வந்த சுயமரியாதை கொள்கையும் கருத்தளவில் ஒன்றாக இருந்ததினால் அவர்களிடையே நட்பு தோன்றி மலர்ந்தது.
இருபெரும் நதிகள் ஒரு கடலில் சந்திப்பதை போல பெரியாரும், சிங்காரவேலரும் பொதுவாழ்வில் பகுத்தறிவுக் கொள்கையுடனும் சங்கமித்துகொண்டனர்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில் தான் பேச வேண்டும். தமிழ்நாட்டு அரசியலும் தமிழில் தான் நடைபெற வேண்டும் என்று சிங்காரவேலர் எதிர்நோக்கி இருந்தார்.1923ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இந்தியாவில் ஏன் ஆசியாவிலேயே முதன்முதலாக தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடித் தொழிலாளர்களின் மேன்மையை உணர்த்தி இந்தியாவில் மே தினத்தைக் கொண்டாடுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் சிந்தனை செல்வர் சிங்காரவேலர் ஆவார்.(சுயமரியாதை கொள்கையுடன் சிங்காரவேலர் தொடர்பு கொண்டதினால் அவர் மறைவுக்குபின் அவரது தோழர்கள் அன்னாரின் தியாகத்தை தொழிலாளர் வர்க்கத்திடம் முழுமையாக கொண்டு செல்லாமல் விட்டனர் என்பது கட்டுரையாளர் கருத்து.)
1925ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் யானை கவுனி பகுதியில் 13வது வட்ட கவுன்சிலராக தேர்வு பெற்று நகரசபை உறுப்பினராகி பணியாற்றினார். சுகாதார துறையில் பல மருத்துவ வசதிகளை மக்களுக்காக தனது நேரடி பார்வையில் வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல் இந்தியாவில் முதன்முதலாக மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு வழிவகுத்தவர் மாமேதை சிங்காரவேலர். எதிர்காலத்தில் இன்று மதிய உணவு திட்டம் வர வழி வகுத்தவர் அவர். இவற்றையெல்லாம் விட சிந்தனை சிற்பி, ஒரு படிப்பாளி, படைப்பாளி, உழைப்பாளியாகவும் திகழ்ந்தார். அவருக்கும் அவருக்கு ஒத்த வயதுடைய சோவியத் மாமேதை லெனின் அவர்களுக்கும் உலக தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதே வாழ்நாளின் லட்சியமாக இருந்தது.
ரஷிய மொழியில் புலமை பெற்றிருந்த சிங்காரவேலர் லெனின் அவர்களுடன் அடிக்கடி கடிதத் தொடர்பு கொண்டு உலக தொழிலாளிகளின் மேம்பாட்டிற்கும் நலத்திற்கும் சதா திட்டங்களை தீட்டி வந்தார். உலக கம்யூனிஸ்ட் இயக்கமான மூன்றாம் அகிலத்தில் உறுப்பினராக இருந்தார். மாமேதையின் கருத்துக்களில் ஒத்த கருத்துடையவர்களாக திகழ்ந்தவர் மேற்கு வங்கத்தின் விழி ராய்; பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொது செயலாளர் சக்லத்வாலா ஆகியோர்.
மாமேதை சிங்காரவேலு அவர்கள் தொழிலாளன் என்ற தமிழ் வார இதழையும் துவக்கி அதை நடத்தி வந்தார் இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் நடைபெற்று வந்த தொழிலாளர்களின் போராட்டங்களை பற்றியும் அவர் இந்த இதழில் எழுதிவந்தார். அதில் அப்போராட்டங்கள் நடப்பதற்கு என்ன அரசியல் காரணம் என்பதையும் அவர் விளக்கி தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்றுபடுத்திவந்தார்.மாமேதை சிங்காரவேலு கம்யூனிஸ்ட் கருத்துக்களை தைரியமாகவும் துணிந்தும் பகிரங்கமாகவும் எடுத்து கூறி வந்தார். அவர் கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் நில்லாமல் செயலிலும் இறங்கி அவர் முன்னுதாரணமாக திகழ்ந்து விளங்கிவந்தார். அவருடைய கம்யூனிஸ்ட் கருத்துகளும் செயல்பாடுகளும் அகில இந்திய புகழ் பெற்றதாயிற்று.
தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக அதுவே அடிகோலியது.பெரியார் சோவியத் நாட்டிற்கு சென்றிருந்தபோது அவர் இல்லாத நேரத்தில் சுயமரியாதை இயக்கத்தைக்கட்டிக் காத்தார். பெரியார் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்ததும் அவரும் சிங்காரவேலரும் சேர்ந்து சுயமரியாதை மாநாட்டில் சமதர்மம் திட்டம் தீட்டினார்கள்.1890ல் சிங்காரவேலர் சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் பி.ஏ. முடித்ததும் தன்னுடைய தகப்பனார். செய்த வியாபாரத்தை தொடர்ந்தார். பர்மா டிரேடர்ஸ் என்ற வியாபாரக் கம்பெனியை தொடங்கி பர்மா, கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு அரிசி இறக்குமதி செய்து வியாபாரம் நடத்தினார்.
6 மாத காலம் லண்டனில் தங்கியிருந்த போது ஏற்கனவே புத்தமதக் கொள்கையில் பிடிப்பு இருந்த சிங்கார வேலர் லண்டனில் நடைபெற்ற உலகபுத்தமத மாநாட்டில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை வெளியிட்டார். அந்த காலகட்டத்தில்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களும் அவருக்கு கிடைத்தன. ஆங்கில புலமை இருந்ததால் அவற்றின் மீது அதிகமான ஈடுபாடுடன் படிக்கலானார். பிற்காலத்தில் லண்டனிலிருந்து மார்க்ஸ் நூல்களை தருவித்து படிப்பதும் மற்றவர்களுக்கு ரகசியமாக கொடுத்து படிப்பதற்கும் உதவினார்.
மேலும் சட்டம் சம்மந்தமான நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.சென்னை சட்ட கல்லூரியில் சேர்ந்து படித்து 1907ம் ஆண்டு பி.எல். பட்டம் பெற்றார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. படித்து கொண்டிருந்தபோது 1889ல் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணம் காதல் திருமணம் _ ஒரு சுவாரசியமான புரட்சி கரமான திருமணம் ஆகும். மீனவ சமுதாயத்தில் பெரிய பட்டினம், சின்னபட்டினம் என்ற இருபிரிவு உண்டு இருபிரிவினரும் கொள்வினை _ கொடுப்பினை உறவு கிடையாது. இருவேறு சாதிகளாக பிரிந்து கிடந்தனர் பகைவர்களாக காணப்பட்டனர். தன்னுடைய அரசியல் மற்றும் சமூக தொண்டுள்ள நண்பர் சுந்தரமூர்த்தியின் தங்கை அங்கம்மாள் அவர்களை காதலித்து பெற்றோரின் எதிர்ப்புக்கிடையே கலப்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் பி.எல். பட்டம் பெற்றார். சிங்காரவேலர் _ அங்கம்மாள் தம்பதியருக்கு வாரிசு கமலா என்ற ஒரே மகள். அந்த காலத்தில் பெண் வாரிசாக கருதப்படாத காலம் ஆகவே மகளின் வயிற்றுபிள்ளையை (சாந்தகுமாரை) தத்து பிள்ளையாக வளர்த்தார். பொது நல தொண்டில் ஈடுபட்ட சிங்காரவேலர் இரவு நெடும் நேரம் கழித்து வருவார் துணைவியார் கண்விழித்து காத்திருப்பாள் வந்த பிறகு அன்போடு உபசரிப்பார்.பொதுவாழ்வில் ஈடுபட்டதால் வீட்டிற்கு வருமானம் கிடையாது பொதுவாழ்வில் செலவுதான் ஏற்படும். அந்தநேரத்தில் எல்லாம் மனம் நோகாமல் அங்கம்மாள் தன்னுடைய நகைகளை கழட்டி கொடுத்து உதவுவார்.
கூட்டு குடும்பத்தில் அங்கம்மாள் தான் மாமேதையாக திகழ்ந்தார்.1920ல் அவரது அன்பு துணைவியார் அங்கம்மாள் நோய்வாய்பட்டு 44வது வயதில் உயிர் நீத்தார். அந்த நிகழ்ச்சி சிங்காரவேலர் அவர்களுக்கு பேர் இழப்பாகும். அவர் இந்திய அரசியலில் விடிவெள்ளியாக ஜொலிக்கும் காலத்தில் இந்நிகழ்ச்சி அவரை ஆறாத துன்பத்தில் ஆழ்த்தியது. பி & சி மில் தொழிலாளர் போராட்டத்தில் 1921ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் நாள் அன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த எழுவரின் சவஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம் ஆகும்.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டால் துப்பாக்கி காட்டி சுடுவோம் என காவலர்கள் மிரட்டியபோது மார்பை திறந்து காட்டி சுடுமாறு கூறினார் காவலர்கள் திகைத்தனர். ஏழுபிணங்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும்வரை உடன் இருந்தார். இடையில் சவத்தையும் சுமந்து சென்றார். இடையில் பல்வேறு இடங்களில் பி & சி நிர்வாகத்தின் தூண்டுதலால் கல்லெறிசம்பவங்களும், சோடா பாட்டில்களும் வீசி தொழிலாளர் ஊர்வலத்தை கலைக்க முயற்சி நடந்தது.
அனைத்தையும் முறியடித்து வெற்றிகரமாக ஊர்வலத்தை நடத்தினார்.1923ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி ஆசியா கண்டத்தில் முதன் முதலில் மேதினம் கொண்டாடிய போது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்குமான ஒரு கட்சியை தோற்றுவித்தார். தொழிலாளர் விவசாயிகள் கட்சிக்காக அதற்கான ஒருபத்திரிக்கையை தொடங்கினார். ஆங்கிலத்தில் தொழிலாளர் _ விவசாயி கெசட் ஆகும். உலக நடப்புகளை உடனுக்குடன் தொழிலாளர்கள் விவசாயிகள் தெரிந்து கொள்ள தமிழில் “தொழிலாளர்’’ என்ற தமிழ்வார இதழை தொடங்கி நடத்தினார். தான் எந்த வேலையை செய்தாலும் தன்னுடைய சகதோழரான லெனின் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்து அவர் ஒப்புதலையும் பெற்று விடுவார்.
1925ம் ஆண்டு சென்னை நகர சபை தேர்தலில் 13வது வட்டம் யானைகவுனி பகுதியில் போட்டியிட்டார். பிரபல செல்வாக்கு படைத்த மதனகோபால் நாயுடுவை அதிகவாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்தகாலத்தில் நகரசபை ஆங்கில மொழியில் தான் நடைபெறும்.
அதைமாற்றி தமிழ்மொழியில் முதன் முதலில் மாநகராட்சியில் பேசியவர் சிங்காரவேலர்தான். அவர் நகர மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பிற்காலத்தில் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக சிங்காரவேலர் வழிகாட்டியாக திகழ்ந்தார்.1937, 38ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ஓர் அரசியல் முழக்கம் செய்தார் சிங்காரவேலர். அவர் நாட்டு அரசியலை தமிழில் அன்றி வேறு எந்த அந்நிய மொழிகளில் நடத்தவிடமாட்டோம் என்று சொன்னாரேயன்றி இந்தி கற்கக்கூடாது என்றோ ஆங்கிலம் வேண்டாம் என்றோ கூறவில்லை.
அனைத்து மொழிகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார் 1922ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை அலுமினியத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்தது. இந்த வேலை நிறுத்தத்தில் சிங்காரவேலு தனி அக்கறை செலுத்தினார் 1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அவர்பங்கு கொண்டு காங்கிரஸ் தொழிலாளர் பிரச்சனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார் பிரிட்டீஸ் அரசாங்கம் விடுதலை வீரர்கள் மீது ஒரு கண் வைத்திருந்ததை விடவும் மாமேதை சிங்காரவேலு போன்ற உரிமை போராளிகளை மேலும், மேலும் கண்காணித்து வந்தது திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் போலிசார் சோதனையிடவும் செய்தனர்.விஷயங்கள் ஏராளம் வாசகர்கள் அவருடைய நூல்களைதேடி படிக்கவும்.
ஆனால் சுருக்கமாக சில விஷயங்களை கோடிட்டு காட்ட வேண்டியுள்ளது.
« உலக இயக்கத்திற்கு பொருளாதாரம் இன்றியமையாதது என்பதை காரல்மார்க்ஸ் போல உணர்த்தினார்.
« காந்தியடிகளின் ஒத்துழையாமை அழைப்பை ஏற்று தமிழகத்தில் பலபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதோடு அல்லாமல் தன் வழக்கறிஞர் அங்கியையும் தீயிட்டு கொளுத்தியவர்.
« கேள்விக்குறிகளாக கூனிக்கிடந்த தொழிலாளர் தம் உரிமைகளை பெற்று தலை நிமிர்ந்திட வழிவகுத்தவர்.
« கான்பூரில் நடந்த பொது உடமை மாநாட்டில் முதன்முதலாக தோழர்களே என்று தொழிலாளர்களை அழைத்தார்.
« சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் அதன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை மாநகராட்சி சார்பில் தோற்றுவித்தார்.
« பகுத்தறிவு கொள்கையை கட்டுரைகளாகக் குடியரசு பத்திரிகையில் எழுதும்படி பெரியாரே கேட்டுக் கொள்ளும் அளவிற்கு தகுதியும் திறமையும் படைத்தவர்.
« தொழிலாளர்களுக்காக லேபர் கிஸான் என்ற கட்சியை உருவாக்கி அதன் வாயிலாக லேபர்கிஸான் கெஸ்ட் என்ற ஆங்கில பத்திரிக்கையும் புது உலகம் என்னும் தமிழ்மாத மார்க்சிய ஏடு நடத்திய முதல் இந்திய தொழிசங்க தலைவர்.
« அதற்கு மேலாக தென்இந்தியாவில் பொது உடமைக் கட்சியை உருவாக்கி மே தினம் இந்தியாவில் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்.
« பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை சோவியத் நாட்டின் கௌரவ விருந்தினராக அழைக்க செய்து அந்நாட்டின் மதிப்புமிகு குடிமகன் என்னும் விருதினைப்பெற்று தந்தவர்.
« மகாகவி பாரதியோடு நெருங்கிய நட்புறவு கொண்டதோடு மட்டுமல்லாமல் அம்மகாக்கவிஞரின் இன்னுயிர் பிரிந்த கனத்தில் அவரை தனது மடியில் கிடத்திநெஞ்சு கணத்திருந்தவர்.
« சோவியத் புரட்சி நடந்ததை சென்னை மாகாணத்தில் முதன் முதலாக தெரிவித்தவர். பாரதியை பாடலாக பாடசொன்னவர்; லெனின் அவர்களோடு நேரடி தொடர்பு கொண்டு கடிதபோக்குவரத்தை அவர்மறையும் வரை கொண்டிருந்தவர்.
ஒரு கைப்பிரதி

0 Comments:

Post a Comment

<< Home