சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Tuesday, February 12, 2008

காந்தியின் சுயராஜ்ய பகல்கனவு

சிங்காரவேலர் இளைஞனாக வலம் வந்த காலம் இந்திய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த காலம். இயல்பாகவே போர்க்குணம் மிக்க சிங்காரவேலர் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டது வியப்பல்ல. 1917ம் ஆண்டிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தொண்ட ராக தன்னை இணைத்துக் கொண்ட வர். தொண்டர் படைத் தளபதியாக மக்களைத் திரட்டி வீரியமுடன் செயல்பட்டவர்.ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கம், ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டன இயக்கம், கானாட்டு கோமான் புறக்கணிப்பு, வேல்ஸ் இளவரசர் புறக் கணிப்பு, கிலாபத் இயக்கம், சைமன் குழு புறக்கணிப்பு, ஒத்துழையாமை இயக்கம் என விடுதலைப் போராட் டத்தின் பல்வேறு அறைகூவல்களை நிறைவேற்றுவதில் முன் நின்றவர். 1922ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் நாள் சௌரி சௌரா என்ற இடத்தில் ஒத்துழையாமை இயக்கம் மும்முர மாக நடைபெற்றது. பிரிட்டிஷ் அர சின் தூண்டுதலால் காவல்துறை ஆணவப் போக்குடன் ஊர்வலம் வந்த மக்களை தாக்கியது. ஏராள மானோர் காயமடைந்தனர். ஆத்திரம் கொண்ட மக்கள் காவல் நிலையத் திற்கு தீ வைத்தனர். இதில் 21 காவ லர்கள் மாண்டனர். பொதுமக்களில் 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.இந்த கொடிய சம்பவம் அரசின் ஆணவப்போக்கின் விளைவு என் பதை காந்தி உணரவில்லை. மாறாக வன்முறையைக் கண்டித்து ஒத் துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார். இதை ஏற்க இயலாத சிங்கார வேலர் “பொது மக்களின் போராட்ட உணர்வை தொடர்ந்து வளர்த்து வருதல், இயக்கம் நடத்து வோரின் தனிப்பண்பாகும் என்றும் அதை இடையில் நிறுத்திவிட்டால் மீண்டும் அந்த உணர்வை உருவாக்க இயலாது” என்றும் கடுமையாக எழுதி னார், பேசினார். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் தீவிரவாத இயக்கங்கள் கருக்கொள்ளத் துவங் கின. சிங்காரவேலரும் அத்தகைய பல்வேறு தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவருடைய சிந்தனைப்போக்கு காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மாறுபட்டது. பொதுவுடைமையை நோக்கி நகர்ந்தது. சுயராஜ்ஜியம் குறித்து அவர் தெளி வான வரையறைகளை கொண்டிருந் தார். ‘நவசக்தி’ நாளேட்டில் மகாத்மா காந்திக்கு எழுதிய பகிரங்க கடிதத் தில் பல விவரங்களை குறிப்பிட்டார். குறிப்பாக, “ஒவ்வொருவருக்கும் சொந்தமான துண்டு நிலம் இருக்க வேண்டும். நமக்கு வேண்டும் உணவை நாமே பயிரிட்டுக் கொள்ள வேண் டும். மேலும் நாம் ஒவ்வொருவரும் வாடகை இல்லாமலோ அல்லது நில முதலாளியின் தயவில்லாமலோ குடி யிருப்பதற்குரிய வீட்டில் வசிக்க வேண்டும். இதற்கான உறுதி இல்லா மல் சுயராஜ்ஜியம் எவ்வடிவில் இருப் பினும் பெற்றுப் பயனில்லை.” மேலும் கூறினார், “நாம் விரும்பும் உண்மை யான சுயராஜ்யம் அதன் வெறும் மாயத் தோற்றமன்று. அது மக்களின், மக்க ளால் உருவாக்கப்பட்ட மக்களுக்காக உள்ள சுயராஜ்ஜியமாக இருக்க வேண்டும். அதற்கு குறைவாக எது வும் இருக்கக்கூடாது. `சுயராஜ்யம் யாருக்கு?’ என்ற கேள்வியை எழுப்பி அவர் எழுதிய கட்டுரைகளை இப் போது வாசித்தாலும் அது ஆட்சி யாளர் மீது வாசிக்கிற குற்றப்பத்திரி கையாகவே இருக்கும். காங்கிரஸ் கனவுகண்ட சுயராஜ் யத்தை சிங்காரவேலர் கேலி செய்தார். “தற்போது நடக்கும் ஆங்கிலர் ஆட்சி முறையே சுயராஜ்யத்திற்கு அடிப் படையாகும். அதே மந்திரிகள், அதே நியாயங்கள், அதே கோர்ட்டுகள், அதே தேர்தல்கள், அதே சேனைகள், சிப்பந்திகள், சேவகர்கள், கவர்னர்கள், மாஜிஸ் டிரேட்டுகள், அதே தனிஉடை, அதே ஜீவனம் ஆனால் இந்த வேலையை பார்ப்போர் ஆங்கிலேயர் களுக்கு பதிலாக இந்தியர்களாக இருப்பார்கள். இந்த வித்தியாசம் ஒன்றை தவிரமற்ற விஷயங்களில் பெரும்பான்மையும் அதே விகிதம்.” இவ்வாறு நையாண்டி செய்த சிங் காரவேலர், காங்கிரஸ் சுயராஜ்யம் யாருக்கு என்பதற்கு, “சுயராஜ்யம் யாருக்கு? என்ற வினாவிற்கு என்ன விடையெனில், பொருளாளிகள், தன வந்தர்கள், செல்வாக்கு பெற்றவர்கள், அதிகார வர்க்கத்தினர். ஆதிக்கமுடை யவர்கள் என்று வழங்கிவரும் பூர்ஷ் வாக்களுக்குக் காங்கிரஸ் சுயராஜ்யம் வேண்டுமேயொழிய, நெற்றியில் நீர் வடிய, நிலத்திலும், நீரிலும், குளங் களிலும், ஏரிகளிலும், வயல்களிலும், மடைகளிலும், சுரங்கங்களிலும், தோட்டங்களிலும், மில்களிலும், ரயில் களிலும், தண்டவாளப்பட்டறைகளிலும், கடலிலும், கப்பலிலும், சாக்கடைகளி லும் பாடுபட்டு வரும் தொழிலாளர், கிரிஷிகர் என வழங்கும் பாமர மக் களுக்கு காங்கிரஸ் சுயராஜ்யத்தால் யாது பயனும் இல்லை.”பின் யாருக்குதான் சுயராஜ்யம். நமது லாயர்களுக்கும், ஜட்ஜூகளுக் கும், மந்திரிகளுக்கும், தர்மகர்த்தாக் களுக்கும், மடாதிபதிகளுக்கும், நிலச் சுவான்தாரர்களுக்கும், தொழிற்சாலை, ரயில் மற்றும் கப்பல் உரிமையாளர் களுக்கும், ராணுவ மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கும், கலாசாலை பண்டிதர்களுக்கும், பட்டவர்த்தனர், மகுடவர்த்தனருக்கும் இவர்கள் சந்த தியார்களுக்கும்தான் நமது தேசிய சுதந்திரம் என்று அறிக. இவ்வாறு காங்கிரஸ் கூறும் சுய ராஜ்யத்தை கடுமையாக விமர்சித்தார். மகாத்மா காந்தி கூறிய தர்மகர்த்தா திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். “புலியும், பசுவும் ஓர் துறையில் நீர் அருந்தினாலும், அருந்தும்; ஆனால் முதலாளியும், தொழிலாளியும் சரி சமத்துவமாக தங்கள் தேசப் பொருட் களை காந்தியாரின் சுயராஜ்யத்தில் அனுபவிப்பார்கள் என்பது பகல்கனவே. தனது சுயராஜ்யத்தில் தொழிலாளிக்கு முதலாளி தர்மகர்த்தாக்களாக இருக்க வேண்டுமாம்! முதலாளி தொழி லாளிக்கு பணிந்து நடக்க வேண்டும்!! முதலாளியை தொழிலாளி எதிர்க்க கூடாதாம்!!! இம்மாதிரியாக நண் டைச்சுட்டு நரியை காவல் வைக்கும் தரும நீதியைத்தான் பொருளாளி இனத்தோர் மரபில் வந்தவராகிய காந்தியார், நமது இந்திய நாட்டு 35 கோடி இந்திய மக்களுக்கு போதித்து வருகிறார். இந்த தருமநீதிதான் காங்கிரஸ் பர்டோலி திட்டத்திலும் வற்புறுத்தப்பட்டுள்ளது.”இவ்வாறு காந்தியின் சுயராஜ் யத்தை கடுமையாக விமர்சனம் செய்த சிங்காரவேலர் சமதர்ம ராஜ்யம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். அதற்காக ஒரு சம தர்ம ராஜ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முக்கிய லட்சணங் களை பட்டியல்போட்டு காட்டினார். அதில் “உழைக்காதவனுக்கு உண வில்லை என்பதே சமதர்மக்கொள்கை என்றார்.” “சமதர்ம சமூகத்தில் சொத்து வைத்திருக்கும் ஜாதி என்றும், சொத்து இல்லாத ஜாதி என்றும் இன வேற்றுமை இருக்காது. எஜமான் ஜாதி என்றும், வேலை செய்யும் ஜாதி என் றும் சம தர்மத்தில் கிடையாது. தற்கால உலகத்தில் இருக்கும் இரண்டு ஜாதி யாகிய பொருளாளி, தொழிலாளி என் போர் இருக்கமாட்டார்கள். சமதர்மத் தில் ஒரே இனம்தான் இருக்கும். அதா வது உழைக்கும் இனம் ஒன்றுதான்.”இப்படி உறுதியாக கூறிய சிங்கார வேலர் கல்வி, வேலை, சுகாதாரம், பொழுதுபோக்கு என அனைத்திலும் எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை தன் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுத் தினார். வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, பொருளாதார சுதந்திரம் மட்டுமல்ல, சமூக சமத்துவமும் வேண் டும் என்பதே அவரது தீர்மானமான முடிவாக இருந்தது. ஜாதி, மத, மூட நம்பிக்கை ஒழிப்பும் அவருடைய சமதர்ம சுயராஜ்ய திட்டத்தில் இடம் பெற்றது.சிங்கார வேலர் வெறும் கனவு களை விதைப்பவர் அல்ல. அதை அடைய உறுதியான மார்க்கம் எது? தத்துவம் எது என்பதை உணர்ந்தவர். அதை அடுத்து பார்ப்போம்.
- சு.பொ.அ

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home