சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Wednesday, February 13, 2008

தொழிலாளி வர்க்க விழிகளைத் திறக்க

1917ம் ஆண்டிலிருந்தே பொது வாழ்வில் ஈடுபட்ட ம.சிங்கார வேலர் பணிகளை ஆய்வு செய்யும் போது, அதில் சுயமரியாதை இயக்கப்பணி களும், சமூக சீர்திருத்த பிரச்சாரமும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதை காண முடியும். அதை பிறகு பார்ப் போம். காங்கிரஸ் கட்சி யிலிருந்து தம் புரட்சிகரமான சிந்தனையோட்டத் தின் காரணமாக வெளியேறிய சிங்கார வேலர் “லேபர் கிஸான் கட்சி” என்கிற அர சியல் அமைப்பை ஏற்படுத்தினார். காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயரில் பகிரங் கமாக செயல் பட வேண்டாம். பொதுவான பெயரில் செயல் படலாம் என அன்றைக்கு எம்.என். ராய் ஒரு கருத்தை முன் வைத்தார். எம்.என்.ராயோடும் அவர் நடத்திய வேன்கார்டு இதழோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சிங்காரவேலர், அவ்வாறே இக்கட் சியை தொடங்கியிருக்க முடியும். அவ் வாறு உருவாக்கிய கட்சியின் அறிக்கை கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அறிக்கை யாகவே அமைந்தது. அவர் ஒரு அறிக் கையில் கூறுகிறார்,“தோழர்களே! தொழிலாளர்களே! நான் மேலும் ஒன்று கூற விரும்புகி றேன். உங்களது ஆற்றலை நீங்கள் அறியவில்லை. உங்களது சக்தியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஒரு முறை உங்களை நீங்களே உணர்ந் தால், இன்று உங்கள் கண்களைக் குரு டாக்கியுள்ள அறியாமை விலகிவிடும். உலகம் உங்களுக்குச் சொந்தமாகும். நெடுந்தொலைவிலுள்ள ரஷ்யாவின் உக்ரைன் நிலப்பகுதியில் `வீ’ எனப் படும் மிகப்பெரும் அரக்கன் இருப்ப தாகச் சொல்வழி வந்த கதையுண்டு. அவ னது கண்ணிமைகள் நிலத்தைத் தீண்டுமளவிற்கு நீளமாக இருந்தன. அவனுக்கப்பால் கிடக்கும் எதையும் அவனால் பார்க்க இயலவில்லை. அவனுடைய தொங்கும் கண்ணிமை கள், இப் பொழுது மெல்ல மெல்ல மேல் நோக்கி எழுந்துகொண்டிருந்தன. ஓரி டத்திலேனும், அவன் கண்ணிமைகள் முற்றிலும் உயர்த்தப்பட்டுள்ளன. இப் பொழுது அவனுக்கப்பாலுள்ளதையும் அவன் இப்பொழுது எல்லைகளுக்கப் பால், குன்றுகளுக்கப்பால், மலை களுக்கப்பால், கடல்களுக்கப்பால், பெருங் கடல்களுக்கப்பால் பார்க்கி றான். ரஷ்யநாட்டுத் தொழிலாளர் வாயிலாக, இந்தியத் தொழிலாளர், ஆசியத் தொழிலாளர், ஐரோப்பியத் தொழிலாளர், அமெரிக்கத் தொழி லாளர், ஆஸ்திரேலியத் தொழிலாளர் ஆகியோர் தோழமையுணர்வில் ஒன் றாகியுள்ளனர். அத் தோழமையுணர் வை வளர்க்க, அவர்களெல்லோரும் உழைக்க உறுதி பூண்டுள்ளனர். கம்யூ னிஸ்டுகளாகிய நாங்கள், மனித இனத் தின் சகோதரத் துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தகைய மனித இன ஒற்றுமையை உண்டாக்க இந்தி யத் தொழிலாளரும் உதவி செய்வர். ஆகையால் பூர்ஷ்வாக்களே கவனித் துக் கேளுங்கள். நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள். இந்தியத் தொழி லாளர்கள் விழிப்புற்றுள்ளனர் என்ப தைத் தெரிந்து கொள்ளுங்கள். வெளி நாட்டிலுள்ள அவர்கள் தோழர்களைப் போலவே குன்றுகளுக்கப்பால், கடல் களுக்கப்பால், பெருங்கடல் களுக்குப் பால் அவர்கள் பார்க்கின் றனர். உலகத் தொழிலாளர் எல்லோரையும் உண்மை யான தோழமையுணர்வு கொள்கின்ற னர் என்பதை அறிந்துகொள்க. நீங் கள் இன்று அவைகளைப் புறக்க ணிக்க முடியாது. அவர்கள் தங்கள் வலிமையை இப்போது உணர்ந்துள் ளனர்.”இப்படி தொழிலாளி வர்க் கத்தின் விழிப்புணர்ச்சியை தலை மீது வைத்து கூத்தாடிய சிங்காரவேலர், முதலாளி கள் குறித்து தொழிலாளிகளுக்கு மிக எளி மையாக எச்சரித்தார். “நிழலில் இருப்பவனுக்கு வெயில் கஷ்டம் தெரி யாது. புளிச்சயேப்பக்காரனுக்கு அகோர பசியின் கொடுமை விளங் காது. தரித்திரத்தில் வாழும் ஏழை கூலியின் தவிப்பு ஒய்யார உல்லாச வாழ்வில் புரளும் முதலாளிகளின் கடின சிந்தனையில் படாது.” இப்படி பலவாறாய் உழைப்பாளி மக்களின் நிலைகண்டு வருந்தியவர் அவர்களை அரசியல் படுத்துவதற்காக தொடர்ந்து சோசலிசத்தின் மேன்மை குறித்தும், உலக அர சியல் நிலைமை குறித்தும், அறி வியல் கண்ணோட்டம் குறித்தும், தத்துவார்த்தம் குறித்தும் எழுதி வந்தார். தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறு வது திண்ணம். ஆனால் அது எளிதில் கைகூடாது. இதை அவர் கூறுகிறார், “நெருப்பாற்றில் எதிர் நீச்சு நீந்தியே தொழிலாளிகள் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும். குருட்டு முதலாளிகளை யும், செவிட்டு சர்க்காரையும் தாண் டியே பாட்டாளிகள் சமதர்ம உலகை தரிசிக்க முடியும்.”இப்படி தரிசிப்பதற்கு ஏதுவாக தொழிலாளி வர்க்கம் தெரிந்து கொள் வதற்காக பொதுவுடைமை விளக்கம் என்கிற பேரில் கம்யூனிஸ சித்தாந் தத்தை தமிழக பாட் டாளி மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குறிப்பாக கார்ல் மார்க்ஸை பற்றி விரிவாக்க குறிப் பிட்டு எழுதினார். எப்படி சொத் துவுள்ளவன், சொத்துஇல்லாத வன் என இரண்டு வர்க்கங்களாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷ யத்தை அந்த பொதுவுடைமை விளக் கத்தில் விரிவாக எடுத்துரைத்தார். பொதுவுடைமை ஆட்சியில் எப்படி யெல்லாம் பிரச்சனைகள் கையாளப் படும் என்பதை குறித்து மிக விரிவாக அவர் எழுதினார். அப்படி எழுதுகிற போது, இந்த மண்ணின் அடிப்படை பிரச்சனையாக இருக்கிற தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற வகை யில் அவர் மிகுந்த அக்கறை காட்டி னார். இன்னும் சொல்லப்போனால் அதை ஒழிப்பதற்கு தொழிற்சங்கங்கள் பாடுபட வேண்டிய விஷயத்தை பட்டி யலிட்டுக் காட்டினார். அவர் காலத்தி லேயே பல தொழிற்சங்கத் தலைவர் கள் சுபபோகத்திற்கும், பட்டம், பதவி களுக்கும் ஆசைப்பட்டதை கண்டித் தார். “பொதுவுடைமையோர் கூறும் வழிதான் துக்க நிவாரண மார்க்கமா கும்.” என தெளிவாக குறிப்பிட்டார். அவர் கூறுகிறார்,“பொதுவுடைமைக் கட்சியின் உதவியின்றித் தொழிலாளிவர்க் கம் சரியான வன்மையோடு முதலாளித் துவத்தை எதிர்த்துப் போராட முடி யாது. பொதுவுடைமைக் கட்சியின் கீழ்தான் தொழிலாள வகுப்பார்கள் தங் களுடைய பூரணசக்தியை உணர்ந்து சரித்திரப் பூர்வமான அதி காரத்துவத் திற்கு உயரிய அமைப்பு திட்டக் கட்சி பொதுவுடைமைக் கட்சியேயாகும். இதுவே அவசியம் ஏற்பட்ட காலத்தில் அவசியமான அமைப்பு முறை களோடு, அவர் களிடையே தலைமை வகித்து நடத்திச் செல்லும்.” இதனால்தான் பாரதிதாசன் இவரை பற்றி குறிப்பிடும்போது, “போர்க்குணம் மிகுந்த செயல்முன் னோடி பொதுவுடைமைக்கு ஏகுக அவன் பின்னாடி” என்றார்.அன்று பாரதி பாடியதுபோல, கஞ்சிக்கு வழியுமிலார் அதன் காரணம் ஏனென்ற அறிவுமிலார் என்கிற வகை யில் உழைக்கும் வர்க்கம் இருந்தால் விமோச்சனம் பெற முடியாது என்பதை ஐயம் திரிபு அற உணர்ந்த சிங்கார வேலர் முதலில் தொழிலாளி வர்க் கத்தை தத்துவார்த்த ரீதியாக ஆயுத பாணியாக்க தொடர்ச்சியாக முயற்சி களை மேற்கொண்டார். அது குறித்து அடுத்து பார்ப்போம்.
... சு.பொ.அ

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home