சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Saturday, May 20, 2006

தூணிலும் இருப்பாரா?

“தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று பிரகலாதன் சரித் திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவு ளென்பதில் அர்த்தமில்லை.
ஆதலின், கண்டவரை யில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமு மில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம். அங்கு மிங்கும் ஓடுங்கிரணங்களும் (சுயனயைவiடிn), தூசும் (னுரளவ), பரமாணுக்களும் (நுடநஉவசடிளே யனே ஞசடிவடிளே) இருப்பதாக யூகையே யொழிய நிலைத் திருக்கும் சத்தாகிலும், அறியும் சித்தாகிலும், உணர் வாகிய ஆனந்தமும், மனிதனுடைய எண்ணத்தின் அதாவது வார்த்தை, அல்லது சொற்கள் அன்னி யில் வேறு தனித்து இருப்பதாக யூகிக்க இடமே இல்லை. உலகில் பரவியுள்ள பற்பல தத்துவ ஞானங்களெனக் கூறும் (ஞாடைடிளடியீhநைள) வார்த்தைகள் யாவும் கற்பனைகளாக முடிகின்றபடியால், எதை யும் அனுபவமாகப் பார்க்க முடியவில்லை.

அந்தந்த தத்துவப் பொருள்களெனப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டே இருக் கின்றன. கடவுளைப்பற்றிப் பேசும் ஞானிகளும், பக்தர்களும் யானையைக் கண்ட குருடர்களைப் போல் பேசுகின்றார்கள். யானையைக் கண்ட குருடர்களாகிலும் ஏதோ ஒரு மிருகத்தைக் கண்டு தங்கள் அனுபவத்திற்குத் தக்கவாறு சொல்லுகின் றார்கள்.
ஆனால், ஞான கிளோவெனில், யாதொன் றையும் பார்க்காமலேயே வாய்க்கு வந்தவாறு சொற்களைக் கட்டி விடுகிறார்கள். கடவுள், ஆன்மா, பிரம்மன், சிவன், விஷ்ணு முதலிய முப் பத்து முக்கோடி தெய்வங்களும், நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், அஷ்டபாலர் முதலிய உபதெய்வங்களும், இருள வன், வீரன், சூரியன், காட்டேரி, பெத்தண்ணன், மாரி, முனியன், சங்கிலி, பாவாடை, குழி இரிசி முதலிய பேய், பிசாசுகளும், நாம் தொட்டிலில் பழகிய சில வார்த்தைகளைக் கொண்டு வயது வந்த பிறகு கட்டிய கற்பனை வார்த்தைகளேயாகும்.
இந்தச் சொற்களுக்காகத்தான் உலகத்தில் எங்கும் கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும், கெதிட் ரல்களும் கட்டப்பட்டி ருக்கின்றன என அறிக! இருளன், வீரன், சூரியனுக் குப் பிரபஞ்சத்தில் இடமில்லை எனில், பக்தர் வணங்கி வழிபடும்

- ம. சிங்காரவேலர்,
(கடவுளும், பிரபஞ்சமும் என்ற நூலில்)

கடவுள் சிருஷ்டியா?

கடவுள் சிருஷ்டியா?

ம.சிங்காரவேலர்

“டார்வின் பரிணாம சித்தாந்தமும்ஸர், அம்பிரோ° பிலமிங் (பிளெமிங்) விஞ்ஞானி யும், ஸர் அம்பிரோஸ பிலமிங் என்பவர் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் தனது விஞ்ஞான புல மைக்காக அநேக பிரபல பரிசுகள் பெற்றவர். இவ ரது சிறந்த வல்லமையை முக்கியமாக ஆகாய தந்தி விஷயமாக காட்டியுள் ளார். இவருக்கு அநேக மாக ஆயிரம் டாலர் மதிப் புள்ள பரிசு இரண்டு இவ ருடைய சாமார்த்தியத் திற்காக கிடைக்கப் பெற் றுள்ளது. இந்தியாதி சிறப்பு வாய்ந்த விஞ்ஞானி.
மத அனு கூலமாக டார்வின் சித்தாந்தங் களில் முதன்மையான மனித உற்பவ சித்தாந்தத் தைக் தாக்கிப் பேசினார். அதற்கு விடையாக உயிர் மெஞ்ஞானங்களில் சிறந்த வராகிய ஸர் ஆர்தர் கீத் பதில் எழுதிய காலத்தில் பலமாக கண்டுபிடித்துள் ளார் ஸர் அம்பிரோ°.
பைபிளில் கூறியுள்ள படி, கடவுள் மனிதனை தன் உருவத்தைப் போல சிருஷ்டி செய்ததாக சொல்லி இருப்பது உண்மை என்றும், டார்வின் சித் தாந்தப்படி ஆதி குரங்கு வடிவமே மனிதனாக மாறி இருக்க முடியாது என்றும் கூறுகின்றோம்.
இந்தப் பிரபல தர்க்க வாதத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மனிதன் 6000 வருஷங்களுக்கு முன் கடவுளால் மண்ணைக் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டானா? அல்லது 6 கோடி வருஷங்களாக சிறு மிருகங்களிலிருந்து உருவம் மாறி வந்தானா என்பதுதான்.
மனிதன் கடவுள் உரு வத்தைப் போல் சிருஷ் டிக்கப்ட்டவனென்றால், கடவுள் உருவம் சைவக் காரன் முகத்தைப் போன் றாகிலும் அல்லது பாபிரி முகத்தைப் போன்றாகி லும் அல்லது தமிழ் நாட் டுத் திராவிடன் முகத் தைப் போன்றாகிலும் அல்லது அய்ரோப்பியன் முகத்தைப் போன்றாகி லும் பெற்றிருந்தாரா என்று கேட்கின்றோம்.
இவ்விதம் வித்தியாசம் கொண்ட முகங்களைப் போல் ஆதிமனிதனைப் படைக்கவில்லை என் றால், இவ்வித வித்தியா சங்கள் பிறகு ஏற்பட்டி ருக்கவேண்டும்.

பிறகு ஏற்பட்ட வித்தி யாசங்கள் மக்களுக்குள் இயற்கையாகத்தான் எழுந்திருக்கவேண்டும். இவ்வித வித்தியாசங்கள் பூர்வ மனித விஞ்ஞானி கள் சொல்வது போல சுமார் 5 அல்லது 6 லட்ச வருஷங்களாக இயற்கை யாக உண்டாயிருக்குமா னால், ஏன் அய்ந்து அல் லது ஆறு கோடி வருஷங் களுள் ஆதி மனிதன், ஆதி மிருகமொன்றிலிருந்து இயற்கையாகவே மாறி வந்திருக்கலாகாது?
இது நிற்க, கடவுள் உருவத்தைப் போல் சிருஷ் டிக்கப்பட்ட மனிதன் தனது தாய் கர்ப்பத்தில் வளரும் போது அய்ந்து ஆறு வாரம் கருவில் வாலொன்றை, கை, கால் கள் தோன்றுவதற்கு முன் காட்டிக் கொண்டு வரு வானேன்?
கடவுள் சிருஷ்டி என் றால், அவர் உருவத்திற்கு ஒரு காலத்தில் வாலொன்று இருத்தல் வேண்டு மென்றோ?
இந்த சிருஷ்டி சித் தாந்தத்தின் ஆபாசத்தை மதாபிமானிகள் ஏன் கவனிப்பதில்லை? ஆசை வெட்கம் அறியாது என்ற ஒரு முதியோர் வாக்கியம் உண்டு. தங்கள் வைராக் கியத்தால் மத°தர்கள் தங்கள் சிருஷ்டி சித்தாந் தத்தின் ஆபாசங்களுக்கு தங்கள் கண்களை மூடிக் கொள்ளுகிறார்கள். தங் கள் மதங்களின் ஆபாசங் களுக்குத் தங்கள் கண் களை மூடிக் கொள்ளா மல் விழித்துப் பார்ப்பார் களாகில் உலகம் எவ்வ ளவோ சீரடைந்தவிடும் என்று பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த பேரறிவாளர் ம. சிங்கார வேலர் கூறிய கருத்துக் களை இன்று வரை கிறி° தவ மதத்தினரால் மறுக்க முடியில்லையே? ஏன்?

- “புது உலகம் ஏடு” மே 1935
நன்றி : விடுதலை

மருளா? மயக்கமா?

மருளா? மயக்கமா?

ம. சிங்காரவேலர்

சிலர், சூன்யம் வைத்ததாகச் சொல்லும் சில கேஸுகளைத் தாமே கண்டதாகவும், மந்திரத்தால் அந்தக் கே°கள் குணப்பட்டதாகவும், தமது அனுபவத்தால் சூன்யத்தை நம்புவதாகவும், அதன் விஷயமாக இரண்டொரு கே° விவரங்களையும் கூறி, அவை எவ்விதம் நடந்திருக்கக் கூடுமென வினவுகின்றார்கள். இத்தியாதி புராதன நம்பிக்கை விஷயமாக நாம் ஒன்று கவனிக்கவேண்டும். தகுந்த விசாரணையின்றி, ஆராய்ச்சியின்றிக் கண்டதையெல்லாம், கேட்டதையெல்லாம் நம்பவேண்டுமானால், எதையும் சூன்யம், மந்திரம் முதலிய சமாதானமெல்லாம் நிகழும் சம்பவங்களைத் தீர விசாரித்து அறியாமல், கொடுக்கும் வியாக்கியானங்களே, “தும்முவதால், போன காரியம் கெட்டுவிட்டது, அவன் கண்பட்டதால், நோய் வந்தது, காரியம் குணமாயிற்று நரி முகத்தில் விழித்தபடியால்” என்ற இத்தகைய மூட நம்பிக்கைகளை, நடந்த விஷயத்திற்கும், கொடுக்கும் சமாதானத்திற்கும், என்ன சம்பந்தம் என்ற மனப்பான்மையை வளர்ப்பதில்லை. வேடர்கள், நாளொன்றுக்கு அநேக நரிகளைப் பார்க்கின்றார்கள், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. போகும் வழியில் சளி பிடித்தவன், ஆயிரந்தடவை தும்முகின்றான். அதனால் அதனைக் கேட்டோர் காரியங்கள் கெட்டுவிட்டதாகத் தெரியவில்லை. கோர்ட்டில் ஜட்ஜுகளை வசியம் செய்ய, மந்திரித்த குங்குமத்தை நெற்றியில் அணிந்து செல்கின்றனர். அவர்கள் கே°கள் சாதாரணமாக ஜெயித்ததாகத் தெரியவில்லை. கிருத்திகை அமாவாசையில் “படுத்தார், தேரார்” என்றும் வழங்குகின்றார்கள்.

ஆனால், மருத்துவமனையில் அந்நாள்களில், நோய் அதிகரிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பலர் இத்தியாதி சம்பவங்களில் நம்பிக்கை வைத்துத் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். இவைகளால் என்ன தெரிய வருகின்றதென்றால், சாதாரணமாக, சொன்னதையும், கேட்டதையும் நம்புவதே, நமது பழக்கமாய்விட்டது. இதேமாதிரி, பலர் சோதிடத்தையும் நம்புகிறார்கள். கிரகங்களால் நமது வாழ்வு பாதிக்கப்படுகிறதாகச் சிலர் சொல்வதை நாம் நம்புகின்றோம். கோடான கோடி மைல் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கும் நமக்குமென்ன சம்பந்தம்? என்பதை விளக்கிக் காட்டுவார் ஒருவருமில்லை.

சூன்யத்தால், “அது நடந்தது, இது நடந்தது” என்று சொல்வதெல்லாம் நடந்த சம்பவங்களுக்கு நாம் கொடுக்கும் சமாதானங்களாகும். இந்தச் சமாதானங்கள், சரியானவையா, அல்லது கேள்விப் பேச்சா என்பதைத்தான், நிச்சயப்படுத்தவேண்டும். தொந்தரவுபடும் பெண்ணின் தாலி, கழுத்திலிருந்து காணாமலும், திரும்பக் காணப்பட்டதாகவும் வைத்துக் கொள்வோம். இதன் காரணமென்ன? சாமான்ய ஜனங்கள் சூன்யத்தால் இந்தவிதமாகச் சம்பவிக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இது சரியான காரணமாவென்பதுதான் கேள்வி. அந்தப் பெண்ணின் சேலை திடீரெனத் தீப்பற்றிக் கொள்கிறதாம். கை வைக்கும் பண்டங்களில் மலம் தோன்றுகின்றனவாம்! இருக்கலாம். ஆனால், அதன் காரணமென்ன? மந்திரத்தாலா, அல்லது நாம் பொறுமையுடன் கவனிக்காத தோஷத்தால் இவ்வித சமாதானத்தைக் கொடுக்கின்றோம்.

கோபத்தில் தாலியைக் கழற்றியெறியும் பெண்கள் அநேகரைப் பார்த்திருமிருக்கின்றோம். இந்தப் பெண்கள் சூன்யத்தால் செய்கின்றார் களென்றாகிலும், பேய் பிடித்துச் செய்கின்றார் களென்றாகிலும், யாரும் சொல்வதில்லை. சில வியாதியுடையவர்கள், தங்கள் சேலையைக் கொளுத்திக் கொள்கின்றார்கள். மன வெறுப்பாலும் இந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள். பைத்தியம் முதலிய மன வெறுப்பால் தன் மலத்தைக் கையாளும் நோயாளியைப் பார்த்துமிருக்கின்றோம். இந்தக் கே°களில், பில்லி சூன்யமென்றும் யாரும் நம்புவதில்லை. சாதாரணமாகக் கோபத்தாலோ மன வெறுப்பாலோ, மன மாறுதலால் நிகழ்வதாக நிர்ணயிக்கின்றோம். நாம் பார்த்த காரியங்கள் ஜன்னி நோயால் நேருவது சகஜம். இவைகளைவிட ஆச்சரியமான காரியங்கள், ஜன்னி நோயால் பீடிக்கப்பட்டோர் செய்கின்றார்கள். குழந்தைகள், மலத்தைப் பூசிக்கொள்வதை அறிவின்மையால் என்று சொல்லுகின்றோம். ஆனால், அறிவை இழந்த முதியோர் செய்தால், அதை சூன்யத்தால் என்கின்றோம். ஏனெனில், குழந்தைகள் செய்வது தினக்காட்சி, முதியோர் செய்வது அபூர்வம்!!!நரம்பைப்பற்றிய வியாதி மிகுதியும் பெண்களுக்கு வருவதுண்டு. அந்தவேளையில் பல அசங்கிதனமான காரியங்களைச் செய்வார்கள். தங்கள் புடவையைக் கழற்றி எறிந்துவிடுவார்கள். கொளுத்திக் கொள்வார்கள். தங்கள் எச்சில், மலம் முதலிய வ°துகளை, வீசி எறிவார்கள். கண்டபடி எல்லாம் பேசுவார்கள். நரம்புபற்றிய வியாதி மருத்துவமனைகளில், இவர்கள் கோராமையைக் காணலாம். இதற்கு வைத்திய வல்லுநர்களால்தான் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளில், மந்திரங்கள் செய்வதில்லை.

மணி மந்திரங்கள், அறியாதாரிடத்தும், அநாகரீகரிடத்துமே காணலாம். இத்தியாதி நடவடிக்கைகளை வைத்தியர்களைக் கொண்டு பார்வையிட்டுச் சிகிச்சை செய்வதுதான் புத்திசாலித்தனமாகும். இல்லாவிடில் கெட்டிக்கார லாயர்களை வைத்துக் கேசை நடத்தாமல் நெற்றியில் மந்திரித்த குங்குமத்தை இட்டுக்கொண்டு ஜட்ஜு முன் காட்டுவதையொக்கும். ஒரு காலத்தில் குளிர் சுரமும், அம்மையும் பேதியும், மாரியாத்தா தெய்வங்களால் உண்டாவதாக எண்ணி இருந்தோம். இன்றைக்கும் பல கோடி பாமர மக்கள் நமது நாட்டில் தேவதைகளால் இத்தியாதி வியாதிகள் நிகழ்வதாக எண்ணி மஞ்சள் துண்டும், குங்குமம், மஞ்சளும் அணிகின்றார்கள். இந்த அறியாமையால் லட்சம் லட்சமாக நமது நாட்டு மக்களை இழக்கின்றோம். ஆதலின் அறியாத பெண்கள் செய்வதையும் மோச மந்திரக்காரர் சொல்வதையும் நம்பாமல் தக்க வைத்தியரைக் கொண்டு அவர்களைப் பார்வையிடச் செய்து தெரிந்துகொண்டால் நலமாகும். சிறுவன் திரேகத்தினுள் பல ஊசிகள் இருந்ததாகக் கண்ட காட்சியில் விசேடம் ஒன்றும் நமக்குத் தோன்றவில்லை, ஊசிகள் செத்துப்போன சதையில் அந்த சிறுவனுக்குத் தெரியாமலே பொத்துக் கொண்டிருக்கலாம். சில காலத்திற்குப் பிறகு அந்த இடத்தில் ஏதோ காரணத்தால் ரத்தம் பரவும் ஊசியின் உணர்ச்சி உண்டாயிருக்கலாம். எப்படியெனில் குளோராபாரம் முதலிய உணர்வை நீக்கும் வ°துக்களைக் கொண்டு அச்சமயம் நோய் தெரியாமல் செய்வதுபோல, அச்சிறுவனுக்கு விளையாடுங் காலத்திலோ அல்லது தேக உறுப்பு உணர்ச்சியற்ற இடத்திலோ, அந்த ஊசிகள் பொத்து இருக்கலாம். பிறகு நோய் தொடுத்திருக்கலாம். இவைகளில் அபூர்வமொன்றுமில்லை.

மருத்துவமனையில் தீராமல், மந்திரக்காரனால் தீர்ந்தது என்று சொல்வதில் யாதொன்றும் விசேஷமில்லை. மருத்துவமனையில் எல்லா வியாதிகளும் தீரும் என்பதொன்றுமில்லை. மருத்துவமனை சிகிச்சையால் தீர்த்துக் கொண்டு வந்திருக்கலாம். வீட்டுக்கு வந்த பிறகு, பூரணமாகக் குணமடைந்திருக்கலாம். இந்தத் தருவாயில், மந்திரத்தை மந்திரக்காரன் செய்திருக்கலாம். பிந்தி வந்தவனுக்குக் கிடைத்தது நல்ல பெயர்!!!

பில்லி, சூன்யம், ஏவல், முனி அறைதல், அண்ணமார், கன்னிமார், சேட்டை, காற்று, கறுப்பண்ணன், என்று வழங்கும் சொற்கள் எந்தப் பொருளைக் குறிப்பதாகச் சொல்கின்றவர்களுக்கே தெரியாது. இவை எதுவும் நிச்சயிக்காத சொற்கள். இன்ன காரணமென்று விளங்காத நோய்களுக்கும், செயல்களுக்கும், இந்தச் சொற்களை காரணமாக உபயோகிக்கின்றார்கள். இந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில், நடுக்கமுறுகிறார்கள். ஆனால், அவ்வார்த்தைகள் இன்னவை என்று யாரும் பார்த்திலர். அதற்கு ஆடும், கோழியும், முயல் காதும், ஓணானும் தலைச்சன் குழந்தை, கை, கால் விரலும், மஞ்சளும், குங்குமமும் நால் வழிகூடும் இடமும், சுடுகாடும், புறக்கடையும் இன்னும் பல சம்பந்தமில்லா மந்திர தந்திரங்களும் பரிகாரங்களென வழங்குகிறார்கள். இத்தியாதி பித்தலாட்டங்களால் பாமர மக்கள் மயங்கித் தங்கள் பிள்ளைகளைச் சரியான சிகிச்சையின்றிச் சாக வைக்கின்றார்கள், இந்தச் சமூக மோசங்களைத் தடுப்பதற்கு வைத்திய ஞானம் பாமர மக்களுக்குப் பரவச் செய்யவேண்டும். இரண்டாவது ராஜாங்கத்தார் “மத நடுநிலை” என்ற பாசாங்கை விட்டுவிட்டு, பில்லி, சூன்யமென்று ஏமாற்றுகின்றவர்களைத் தண்டிக்கச் சட்ட விதிகள் செய்யவும் வேண்டும்.

நன்றி : விடுதலை

Tuesday, May 16, 2006

மாமேதை சிங்காரவேலர் வரலாறு - ச. சுடலைமுத்து

உலக அளவில் புகழ்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் மகாத்மா காந்தி, ஈ.வே.ரா மற்றும் மா. சிங்காரவேலர்இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார். 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார். கந்தப்ப செட்டி வம்சத்தில் உயர்கல்வி பெற்றவர்களில் இவர் ஒருவரே. 1881 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பு தேர்வு பெற்றவர், கிறிஸ்தவர் கல்லூரியிலிருந்து 1884 ஆம் ஆண்டு FAO படிப்பு முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பிரசிடென்ஸி கல்லூரியில் BA முடித்தார். 1907ல் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் BL டிகிரி பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத் தொழில் புரிந்தார். 1889 ஆம் ஆண்டு அங்கம்மாள் (சாதி மறுப்பு திருமணம்) என்பவரை மணந்தார். அவருடைய ஒரே பெண் குழந்தை கமலா. வழக்கறிஞராக அமோகமாக வாழ்க்கையில் வெற்றி கண்ட சிங்காரவேலர், திருவான்மியூர், மைலாப்பூர் ஆகிய இடங்களில் சில எஸ்டேட்டுகளை வாங்கினார். பெண்களுக்கு சம பங்கில்லாத அந்த காலத்தில் தனது மகளின் மகன் சத்தியகுமாரை தனது மகனாக 1932ல் சுவீகாரம் எடுத்துக்கொண்டார்.விடுதலைப் போராளி மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட சிங்காரவேலர் தமிழகத்தில் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரானார். 1918ல் பிரிட்டிஷ் அரசு ரௌலட் சட்டம் எனும் மக்கள் விரோத சட்டத்தை _ மக்களின் பேச்சு சுதந்திரத்தைப் போராட்ட சுதந்திரத்தை மறுக்கும் ரௌலட் சட்டத்தை கொண்டுவந்தது. விசாரணையின்றி மக்களை தண்டிக்க அது பாதை அமைத்தது. அந்த கறுப்பு சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சி போராட்ட வடிவங்களை கையிலெடுத்தது. சிங்காரவேலர் சென்னையில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தினார்.
இந்திய வரலாற்றில் 1919 ஏப்ரல் 13. இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்த்தெடுக்கப்பட்ட நாள். 400க்கும் அதிகமானவர்கள் இறந்த 2000 பேர்கள் தங்களின் கால்களை இழந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நாளே அந்நாள். ரத்த ஆறு ஓடியது. நாடு முழுவதும் பஞ்சாப் படுகொலை கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இத்தகைய மனிதத்தன்மையற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். 1921 மே மாதம் ஒரு பொதுக் கூட்டத்தில் சிங்காரவேலர் தனது வக்கீல் கவுனை எரித்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்கும் முகமாக தனது வக்கீல் தொழிலை விட்டார். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த அத்தனை துறைகளையும் பகீஷ்காரம் செய்ய தீர்மானித்தார். 1921 ல் அவர் மகாத்மா காந்திக்கு அவருடைய செயலுக்கு விளக்கமாக எழுதுகையில் “நான் இன்று எனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டேன். இந்த நாட்டின் மக்களுக்காக தங்களுடைய போராட்டத்தை நான் தொடர்கிறேன்’’ ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக சிங்காரவேலர் திகழ்ந்தார். முதல் படியாக அவர் அறிவித்த முழு அடைப்பும் வெற்றி பெற்றது.
ரௌலட் சட்டம் நிறைவேறிய பிறகு, ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் சௌரி சேளரா நிகழ்வுகளுக்கு பிறகு பிரிடிஷ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கினர். மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவிக்க மக்களின் எதிர்ப்புணர்வை மாற்ற வேல்ஸ் இளவரசர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இந்த முயற்சி மக்களை சாந்தப்படுத்த வில்லை. சென்னையில் இந்த தூதுக்குழு வருகையை பகீஷ்காரம் செய்ய மக்களை திரட்டினார். சென்னையை குலுக்கிய ஒரு மிகப்பெரிய ஆர்பாட்டம் என இதனை அணணாதுரை வர்ணிக்கிறார்-.1922ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மகாசபையில் சிங்காரவேலர் பங்கேற்றார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, ‘தோழர்களே’ என்று அழைத்தார். (இந்தியாவில் முதலில் தோழர் என்ற வார்த்தையை பயன்படுத்திய தலைவர் அவர்) கயாவில் அவருடைய பேச்சின் சுருக்கம் வருமாறு: “மனித நேய ஆட்சிக்காக நாம் போராடி வருகிறோம் ஒத்துழையாமை, வன்முறையின்மை ஆகிய ஆயுதங்களோடு நாம் போராடுகிறோம். அவைகளில் நானும் நம்பிக்கை வைக்கிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் சகோதரத்துவத்திற்கு அவர்கள் (ஆட்சியாளர்கள்) பொருந்தாதவர்கள். அவர்களின் நடத்தையிலே வேறுபடுபவர்கள்.’’ சாதனைகள்:1. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்ற இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்.2. 1923ல் தொழிலாளர் தினம் (மே தினம்) கொண்டாடியதன் மூலம், மேதினம் கொண்டாடிய முதல் இந்தியர் (ஆசியாவிலேயே முதலாவதும் கூட)3. 1923 மே மாதத்தில் தொழிலாளர் விவசாய கட்சியை தொடங்கினார்.4. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியதிலும் அவரே முன்னோடி. 1925ல் சென்னை மாமன்றத்தின் உறுப்பினராக தேர்வு பெற்றபின் இந்த திட்டத்தை துவக்கினார்.5. தொழிலாளர் நலனுக்காக, “தொழிலாளர்’’, “லேபர் கிசான்’’ ஆகிய 2 பத்திரிகைகளை தொடங்கினார்.
இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். பொருளாதார சீர்திருத்தத்தை மனதில் கொண்டு, “சென்னை தொழிலாளர் சங்கம்’’ என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவிலேயே முதலில் ஏற்படுத்தினார். இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இதுவே.வி.ஷி.வி ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களை உருவாக்கியவரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸ் கயாவில் கூடியபோது, உலகத்தின் நலத்தில் ஈடுபாடு கொண்ட வெகுஜன அமைப்பின் பிரதிநிதியாகவே அவர் பங்கேற்றார். தொழிலாளர் சட்டங்கள் தேவை என்பதற்காக பேசிய அவர், காங்கிரஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே தொழிலாளர் இயக்கமும் உள்ளது என கருதினார். நாடு சுதந்திரத்திற்கான இலக்குகளை அடைய நாட்டு தொழிலாளர்களின் பயன்பாட்டை பயன்படுத்த தவறியதாக அவர் எடுத்துக்காட்டினார். காங்கிரஸ், வன்முறையற்ற தன்மை, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழிலாளர்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று யோசனை கூறினார். தேசிய அளவில் ஒரு வேலைநிறுத்தத்தை தொடுக்க முடியவில்லையானால் ஆங்கிலேய அரசை அசைக்க சாத்தியமில்லை.
எனவே, தொழிலாளர்களை அணுகி காங்கிரசின் ஒரு அங்கமாக தொழிற்சங்கங்களை தொடங்குதல் இன்றியமையாதது என்றும் கூறினார்.தொழிலாளர்களில் இலக்கு சுதந்திரம்; அது அரசியல், வணிக, பொருளாதார சுதந்திரம் என அர்த்தப்படும் என்றார். இந்தியாவின் மேதினத்தை கொண்டாடியவர்களில் முன்னோடிஇந்தியா முழுமையும் இந்தியாவில் (ஆசியாவில் கூட) மே தினத்தை முதல் முதலில் கொண்டாடிய முதல் மனிதராம் சிங்காரவேலரையே அவரின் உதாரணத்தை பின்பற்றினர்.ஆரம்பக்காலத்தில் 1888 மே மாதம் முதல் தேதியன்று மே தினம் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய வெகுஜன ஊர்வலத்துடன் நடைபெற்றது. அதில் பேசிய அனைவரும் 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டாம் என வலியுறுத்தினர். அதன் பிறகு முதலாளித்துவ வாதிகளால் உழைப்பாளிகள் கொல்லப்பட்டதை முன்னிட்டு அத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுதான் மேதினத்தின் சிறப்பும் வரலாறும் ஆகும். 1923ல் மேதினத்தை 2 இடங்களில் கொண்டாட ஏற்பாடுகளை செய்தார் சிங்காரவேலர். ஒரு பொதுகூட்டம் அவருடைய தலைமையில் உயர்நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் நடைபெற்றது. மற்றொன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. “தொழிலாளர்களால் மட்டுமே மேதினம் கொண்டாடப்படுகிறது எனக்கூறிய இவர், தொழிலாளர்கள் இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்றி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பர் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக தொழிலாளர்களுக்கான ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுவதாக அரிவித்தார். சிவப்புக்கொடியை ஏற்றி ‘தொழிலாளர் விவசாயிகள் கட்சி’யை தொடங்கினார். இந்த புதிய கட்சியின் திட்டங்களையும், தீர்மானங்களையும் விளக்கினார்.
1927ல் மேதினம் சிங்காரவேலர் இல்லத்திலேயே கொண்டாடப்பட்டது. அவர் உழைப்பாளர்களுக்கு உணவளித்தார். ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறித்து தேசத்தின் சகலத் தொழிலாளர்கள் சார்பாக அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேதின கொண்டாட்டத்தை பற்றி ஹிந்து பத்திரிகை எழுதியது. “சென்னை மேதின விழாவில் தொழிலாளர் விவசாயி கட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் சிங்காரவேலர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேதினத்தை விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி அரசை வலியுறுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. கட்சியின் தலைவர் வன்முறையற்ற பாதையே கட்சியின் நடைமுறை என விளக்கினார். நிதி உதவி கேட்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சுதந்திரத்தை அடைய உலகத்தொழிலாளர்கள் ஒன்று கூடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.’’ அண்ணாதுரை தனது மேதின கூட்டத்தில் மேதினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். 1986 முதல் மே தினத்தை அரசும் கோண்டாடுகிறது. நேப்பியர் பூங்கா என்பதை மேதின பூங்கா என முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றினார். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக முன்னாள் பிரதமர் க்ஷி.றி. சிங் மேதினத்தை ஒரு சம்பள விடுமுறைநாளாக அறிவித்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளின் இத்தகைய செயல்களுக்கு சிங்காரவேலரே ஒரு காரணியாக அமைந்தார்.1933ல் நடைபெற்ற மேதினத்தில் சிங்காரவேலர் ஆற்றிய விரிவான உரை 1933 மே 7ஆம் தேதி ‘கொடியறம்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று.
அவருடைய பேச்சின் சாராம்சம் வருமாறுநாம் வன்முறையிலோ அழிவிலோ சமத்துவத்தை நம்பவில்லை. நாம் பொருட்களின் பங்கீட்டில் சமத்துவம் நிலவுகிறதா என்பதையே நாம் காணவேண்டும். உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். யாரெல்லாம் நாம் சமத்துவத்தை நம்புகிறோமோ அவர்கள் அனைவரும் பார்லிமெண்ட் அவைகளில் நாம் இடம் பிடிக்க வேண்டும். உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டு செல்லும்.மதிய உணவு திட்டத்தின் முன்னோடி 1925ல் சிங்காரவேலர் சென்னை மாமன்ற உறுப்பினராக தேர்தலில் நின்று ஜெயித்தார். அவரது முதல் தேர்வு சுற்றுப்புற தூய்மையே. தூய்மையே சிங்காரவேலரின் மிகப்பெரிய பங்களிப்பு குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியதே ஆகும். பின் காமராஜ்க்கு உதவி; இந்த திட்டம் தமிழக அளவில் அமல்படுத்தப் பட்டது. சிங்காரவேலர் தமிழ்நாடு அரசின் நிர்வாக மொழி தமிழே நிலைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொழிலாளர் இயக்க வரலாற்றில் 1918 ஏப்ரல் 27ஆம் நாள் முதல் தொழிற்சங்கம் உருவானது. வ.உ. சிதம்பரம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டமைக்காக அவருக்கு விதிக்கப்பட்ட பல ஆண்டுகால ஆயுள் தண்டனையின் மூலம் இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கான தொழிலாளர் சங்கம் தேவையென்பதை உணர்ந்தனர். அதன் விளைவாக சென்னை தொழிலாளர் சங்கம் உருவானது. இந்த சங்கத்தின் தலைவர் சிங்காரவேலர்.இந்த சங்கம் உருவானவுடன் சிங்காரவேலர் சக்கரை செட்டியார், சர்க்காரி ஆகியோருடன் இணைந்து சில வேலைநிறுத்தங்களை நடத்தினார். ஙி&சி யில் உருவான சங்கம் ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வேறு பல சங்கங்கள் உருவாகின. அவை 1. வி.ஷி.வி ஊழியர்கள் சங்கம் 2. எலக்டிரிசிட்டி தொழிலாளர் சங்கம் 3. டிரெயின்வே பணியாளர் சங்கம் 4. பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் 5. தச்சுத் தொழிலாளர் சங்கம் 6. அலுமினியம் தொழிலாளர் சங்கம் 7. ஐரோப்பிய தொழிலாளர் சங்கம் 8. மருத்துவர்கள் (பார்பர்கள்) சங்கம் 9. துப்புரவு தொழிலாளர் சங்கம் 10. மீனவர் சங்கம் 11. ரயில்வே தொழிலாளர் சங்கம் 12. கோயம்புத்தூர் நூற்பணியாளர்கள் சங்கம்அனைத்து சங்கங்களும் சிங்காரவேலரால் ஆரம்பிக்கப்பட்டவை. தென்னிந்தியாவில் தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கிய உடனே அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் காட்டுத்தீயாய் பரவியது. அதன் விளைவாக மும்பை, கொல்கத்தா, கான்பூர், நாக்பூர் போன்ற பகுதிகளிலும் தொழிலாளர் சங்கங்கள் உருவாகின. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் பெருகியதால் சங்கங்கள் பெருகின. சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கிய சில வாரங்களிலேயே எல்லா முனைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பின. தொழிற்சாலைகளின் முதலாளிகள், தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர்.
சென்னையிலிருந்த சூளை காட்டன் மில் தொழிலாளர் இயக்கத்தை பலப்படுத்தினார். முதலாளிகளின் வெறுப்புணர்வு தொழிலாளிகளின் மேல் அதிகரித்ததாலும், திரு.வி.க. மற்றும் சிங்காரவேலரின் எழுச்சியூட்டும் இயக்கத்தால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைய அதிக ஆர்வம் கொண்டனர். சென்னை தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், பிரிண்டிங் பணியாளர் சங்கம், பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதில் புகழ்பெற்று விளங்கின. 1921 ஆகஸ்டில் ஙி&சியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நிர்வாகம் சாதி சண்டையாக மாற்ற சதி செய்து அதன் விளைவாக 2 பகுதி மக்களிடத்தில் பிரச்சனை உண்டாகி துப்பாக்கிச் சூடும் நடைப்பெற்றது. துப்பாக்கி சூட்டில் பெரம்பூரில் ஏழுபேர் இறந்தனர். அவர்களின் இறுதி சடங்கிற்கு போலீஸ் தடைவிதித்து மீறுவோரை சுடுவோம் என மிரட்டிய போதும் சிங்காரவேலர் தனது மார்பை திறந்து சுடுமாறு கூறி முன்னேறினார். 1927ல் நடைபெற்ற வடக்கு ரயில்வே வேலைநிறுத்தத்தில் கல்கத்தா மற்றும் ஹெளரா ஆகிய இடங்களில் நடைபெற்றது. அதற்கு சட்ட ஆலோசகராகவும் வேலைநிறுத்தத்தை நடத்துபவராகவும் ஆனார் சிங்காரவேலர்.அதன் பிறகு தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலையில் நடத்திய வேலைநிறுத்தத்திற்கும் தலைமையேற்றார். இந்தப் போராட்டம் இரத்தத்தால் எழுதப்பட்டது. கடும் போராட்ட விளைவுகளுக்குப் பிறகு இவ்வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது. சிங்காரவேலர் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்காரவேலர் “சாதாரணமானவருக்கும் சொத்து அடைவதே கம்யூனிஸம். பூமியினுள் நாம் காணும் பொருட்களை கையாளுவதற்கான ஒரு வழி பொருட்கள் சமமாக பங்கிடப்படும் வழிகளில் ஒன்று’’ என கம்யூனிஸத்£தை விளக்குகிறார்.கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு
1925 டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாடு நடைபெற்றது. இதுதான் முதல் மாநாடு ஆகும். சிங்கார வேலர் தனது தலைமைவுரையில் “கம்யூனிசத்தின் விதிகள் மனித நேயத்துக்கு எதிரான நோய்களிலிருந்து மனிதநேயத்திற்கு உதவுதலே ஆகும்.’’ எல்லா மக்களுக்கும் இன்றியமையாத எல்லா பொருட்களையும் உழைப்பாளர்கள் உற்பத்தி செய்கின்றனர் என கம்யூனிசம் கூறுகிறது. அவர்களின் கடுமையான உழைப்பின் விளைவாக ஒவ்வொருவரும் நன்றாக வாழ போதுமானதாகிறது. ஆனால் மூல ஆதாரங்கள் முதலாளிகளின் கையிலே இருக்கும்வரை தொழிலாளர்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒரு நியாயமான பங்கை உற்பத்தியான பொருட்களில் கிடைக்கப் பெற்றால், மூலப்பொருட்கள் அவர்களின் கைக்கு சொந்தமாகிவிடும். இதுதான் கம்யூனிசத்தின் அர்த்தம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கீழ்க்கண்டவற்றை நோக்கமாக கொள்ள வேண்டும்; சுய ஆட்சி இல்லாமல் வாழ்க்கையில்லை; உழைப்பாளர்கள் இல்லாமல் எந்த சுய ஆட்சியும் இல்லை; அரசாங்கத்தால் பல மாற்றங்கள் நடைபெற்ற போதும் நாம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தலைமை ஏற்கவேண்டும் நாம் கூடவே உழைப்பாளர்களின் உரிமைகளுக்கு பாதுகாவலனாக விளங்க வேண்டும் கல்வி அறிவு இல்லாத மக்கள் திரளை ஒற்றுமைப்படுத்துவதும் அவர்களை விடுதலை செய்வதும் கம்யூனிஸ்ட்களின் கடமையாக கொள்ள வேண்டும்.தேசத்தின் வளர்ச்சியும் உழைப்பாளர்களின் முன்னேற்றமும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களை சார்ந்தே உள்ளது எனும்பாடத்தை மற்ற கட்சிகளின் தவறுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பாடம் கற்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உழைப்பாளிகளுக்கு நேரடியான பிரதிநிதித்துவத்திற்கான ஒரு முடிவுடன் நீங்கள் வர வேண்டும்’’ என பேசினார்.
ஆங்கிலேய அரசு கடுங்கோபம் கொண்டு சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களை நசுக்க திட்டம் தீட்டினர். கம்யூனிஸ்டுகளை 1923 மே முதல் கைதும் செய்தனர். 1924 மார்ச் 4ல் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்காரவேலர் பின் அவரை பெயிலில் விடுவித்தது; ஆனால் வழக்கு தொடர்ந்து நடத்த இறுதியாக அவர் மீதுள்ள வழக்குகளை தொடர்வதா அல்லது நீக்குவதா எனும் முடிவை இந்தியாவுக்கான செயலாளர், இலண்டனில் எடுத்தார். இலண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலாளர் கவர்னர் ஜெனரலைவிட உயர்ந்த பதவியிலுள்ளவர். எனவே, உலகத் தலைவராக மாறினார் சிங்காரவேலர்.1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்காரவேலரும் இதர தலைவர்களும் விடுதலையாயினர். அப்பொழுது சிங்காரவேலருக்கு வயது 70. பிற்கால கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.எஸ்.கே., பி. சீனிவாசராவ், பி. ராமமூர்த்தி, கே. முருகேசன் ஆகியோருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு.தமிழகத்தில் மகாகவி பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மகாகவி பாரதியின் உயிர் இவரின் மடியில் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. திரு.வி.க மற்றும் ஈ.வெ.ரா. பெரியாரின் நல்ல தொடர்பை பெற்றிருந்தார். ஈ.வெ.ரா பெரியார் ரஷ்யா செல்வதற்கு இவரே காரணம் என்றும் கூறப்படுகிறது. பெரியாரின் குடிஅரசு பத்திரிகையை பெரியார் அவர்கள் ரஷ்யா சென்றபோது இவரே முழுப்பொறுப்பில் கவனித்து வந்தார்.பெரியாரின் ஈரோட்டுப்பாதை என்ற அற்புதமான திட்டத்தை தயாரித்து கொடுத்தவர் சிங்காரவேலர் என்பதும் ஈரோட்டில் சுயமரியாதை தோழர்கள் கூட்டத்தில் சிங்காரவேலர் பேசினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.இறுதியில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை அச்சு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசிய பேச்சே அவரின் இறுதிப்பேச்சு.பக்கவாத நோயினால் பலமாத காலம் படுத்த படுக்கையாயிருந்த சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இறுதியாய் அவரின் விருப்பப்படி 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 11 (1946) சிங்காரவேலர் நினைவுநாள்
பிப்ரவரி 18 (1860) சிங்காரவேலர் பிறந்தநாள்