சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Wednesday, February 13, 2008

புதிய இளைஞர்கள்

சிங்காரவேலர்
1927 ஆம் ஆண்டு பொதுவுடைமைத் தோழர்களான சாக்கோ, வான்சிட்டி ஆகியோரைத் தொழிற்சங்கவாதிகள் என்று குற்றஞ்சாட்டி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொன்றது அமொ¢க்க ஏகாதிபத்தியம்.
இக் கொடிய செயலைக் கண்டித்து, சென்னை பீப்பிள்ஸ் பார்க்கில்(மூர்மார்க்கெட் அருகில்) கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் சிங்காரவேலர்.
ஆனால் அந்நாளைய அரசு, காவலர் படையைக் குவித்துக் கூட்டத்தை நடத்தவொட்டாமல் அச்சுறுத்தியது. இதனால் பேச்சாளர்கள், தலைமையேற்க ஒப்புக் கொண்டவர்கள் உள்பட எல்லோரும் காவல்துறை கெடுபிடியினால் அந்தப் பக்கமே வரவில்லை.
எனவே, கூட்டமே கூடாது என்று வெறுத்துப்போய் அங்கு வந்த சிங்காரவேலர் கண்ட காட்சி வேறு வகையாக இருந்தது. புதிய இளைஞர்கள் சமதர்மப் பாடல்களை மேடையில் பாடிக்கொண்டிருந்தார்கள். அஞ்சாநெஞ்சன் அழகி¡¢சாமி மேடையில் வீற்றிருந்தார்.
இதனால் எழுச்சியுற்ற சிங்காரவேலர், தாம் பேசுகையில் இத்தனை கெடுபிடிகளிலும் கூடியிருந்த பொதுமக்களை மனதாரப் பாராட்டினார். அமொ¢க்க அரசுக்குக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். இக்கூட்டத்தில் மாவீரன் அழகி¡¢ பேசியதாவது..
"மீன்பிடிக்கும் சமூகத்தைச் சேர்ந்த இத்தாலியத் தோழர் வான்சிட்டி அமொ¢க்க அரசால் தூக்கிலிடப்பட்டு இறந்ததைப் போல, இந்த நாட்டின் மீனவச் சமுதாயத்தைச் சார்ந்த சிங்கார வேலர் ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டுப் பொதுவுடமை இயக்கத்துக்கு உயிரூட்டவேண்டும்" என்று கோ¡¢க்கை விடுத்தார்.
இக்கூட்டத்திற்குப் பிறகுதான் சிங்காரவேலர் சுயமா¢யாதைக்காரராகவும் மாறினார் என்று அறியப்படுகிறது.
சிங்காரவேலர் ஒரு இதழாளர்
லேபர் கிசான் கட்சியை, 1923 மே நாளில் தொடங்கிய சிங்காரவேலர், லேபர் கிசான் கெசட் - என்னும் ஆங்கில மாதமிருமுறை இதழை வெளிக்கொணர்ந்தார். ஆனால் அந்த இதழை அரசு தடைசெய்துவிட்டது. அடுத்து தொழிலாளன் என்று தமிழிலும் வார இதழை நடத்தினார்.
மேலும் இவா¢ன் படைப்புகள்- குடியரசு, சண்டமாருதம், சமதர்மம், பகுத்தறிவு, புதுஉலகம், புரட்சி, ஜனசக்தி, ஆகிய தமிழ் இதழ்களிலும் - Sunday Advocate. Sunday Observer, Swadhrma, Vanguard, Labour Kissan Gazette, The Hindu. The Mail ஆகிய ஆங்கில இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

0 Comments:

Post a Comment

<< Home